பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 101 ALL -- S > தேடியிருந்தனர். அதன்பின்னர்ப் பூதத்தாழ்வாரும் அங் கேபோய் இடமுண்டோ என்று வினவப், பொய்கையாழ் வார் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் என்றனர். அதன்பின்னர் மற்றவரும் அங்கே சென்று இடமுண்டோ என்று வினவ, அப்பொய்கையார் ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்ற னர். அவ்வாறே மூவரும் அங்கே போய் நிற்பாராயினர். அப்பொழுது கண்ணபிரான் தம்முடைய அநுக்கிரகத் திருவிளையாடலைக் காட்டும் பொருட்டு அம்மூவருக்கி டையே தாமுஞ் சென்று அவர்களை நெருக்கினர். ஆழ்வார் மூவரும் முன் னில்லாத நெருக்கம் இப்பொழுதுண்டா யது என்னை என்று திகைத்தனர். பொய்கையாழ்வார் வையந் தகழியாய் வார்கடலே நெய்யாக - வெய்ய கதி ரோன் விளக்காகச் செய்ய - சுடராழி யானடிக்கே சூட் டினேன் சொன்மாலை - இடராழி நீங்குவேனென்று என் னும் முதற்றிருவந்தாதியால் சூரியனை விளக்காக ஏற்றிப் பார்க்க, பூதத்தாழ்வார் "அன்பே தகழியா யார்வமே நெய்யாக - வின் புருகும் சிந்தை யிடுதிரியாய் - நன்புருகி - ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு - ஞானத் தமிழ்புரிந்த நான்." என்னும் இரண்டாந் திருவந்தாதி யால் ஞானத் தீபத்தை ஏற்றிப்பார்க்க, இவ்விரண்டானும் இருளற்றமையால், பேயாழ்வார் திருமாலை உள்ளபடி கண்டு, "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் றிகழும் - அருக்க னணி நிறமுங் கண்டேன் - செருக்கிளரும் - பொன் னாழிகண்டேன்புரிசங்கங்கைக்கண்டேன் - என்னாழி வண் ணன்பா லின்ற). "' என்னும் மூன்றாந் திருவந்தாதியை அரு ளிச்செய்தார். அப்பொழுது கண்ணபிரான் திருவருளால் ஞானசோதி தோன்ற அப்பெருமானைப் பிரத்தியட்சமா கக்கண்டு மேலும் பாடித் துதித்துப் பரவசரானார்கள். இவர்கள் மூவரும் அந்தாதி யொவ்வொன்றுக்குந் தனித்