பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தென்மொழி வரலாறு. தனி நூறு செய்யுளாக முந்நூறு செய்யுள் செய்தனர். நாலாயிரத்தில் முந்நூறு போக எஞ்சிய மூவாயிரத்தெழு நூறும் மற்றைய ஆழ்வாநர் ஒன்பதின் மராலும் பாடப்பட் டன. தேவாரங்கள் போல இந்த நாலாயிரப்பிரபந்தமும் கேட்போர் மனத்தை உருக்கிப்பரவசப்படுமாறு செய்யும் இனிமையும் பத்திச்சுவையும் பெரிதுமுடையன. திருமங்கையாழ்வார். இவர் கலியுகம்நா னூற்றறுபதின்மேல் திருநகரியிலே நீலனென்னுமொரு சூத்திரனுக்குப் புத்திரராகப் பிறந்த வர். இவரே ஸ்ரீரங்கத்துக் கோபுரத் திருப்பணி செய்த விஷ்ணு பத்தர். இவர் பத்தினியார் குமுதவல்லி. இவர் விஷ்ணு பத்தராவதற்கு முன் ஆறலைக்குங் கள்வர். துறவு பூண்டபின் ஆழ்வார் பன்னிருவருள் இவரே சிறந்தவர். நாலாயிரப் பிரபந்தத்துட் பெரிய திருமொழி இவர் திரு வாய் மலர்ந்த தேன்பாமாலை. s. திருமூலநாயனாரும் திருமந்திரமும். நந்திதேவர் மாணாக்கராகிய சிவயோகியாரென்பவர். அகஸ்தியரைக் காணும் பொருட்டுத் தெற்கு நோக்கிச் செல்லும் வழியிலே திருவாவடுதுறையில் மூலனென்னு மோரிடையன் இறந்து கிடக்க, அவன் மேய்த்த பசுக்கள் நின்று கதறி அழுதலைக்கண்டு பரிவுற்று அவன் காயத்திற் பிரவேசித்து, அவனைப்போல அவைகளை மேய்த்து ஆற்றி விட்டுத் திரும்பிவந்து தமது சரீரத்தைத்தேடி அதனைக் காணாமையால் அம்மூலன் சரீரத்தோடுதானே அங்கிருந் து மூவாயிரம் வருடம் யோகஞ் சாதித்த இவர் வருடத் துக்கு ஒரு மந்திரமாக மூவாயிரம் மந்திரங்களை அருளிச் செய்தவர். அவற்றின் றொகுதி திருமந்திர மெனப்படும், & S. S. அ.