பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.( தென்மொழி வரலாறு நக்கீரர். சங்கப்புலவர்களுள் ளே கீரனாரென்னும் பெயரால் பலர் விளங்கினர். இவ்வுண்மை , மோசிகீரனார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பொருந்திரிளங்கீரனார் குட்டுவன் கீரனார் முதலியோர் பெயர்களால் நன்கு துணி யப்படும். தரும் கொண்டு சென் பாடல் சிவபெருமான் அரு ளிச்செய்த தென் ற றிந்த வழியும் குற்றம் குற்றமேயென்று சாதித்த நக்கீரனார், வங்கிய சேகர பாண்டியனும் அவன் மகன் சண்பக மா ற னும் இருந்த காலத்தில் விளங்கியவர், மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், இறையனாரகப் (பொருளுக்கு உரைசெய்தவர். இவரே திருமுருகாற்றுப் படையும் நெடுகல் வாடையும் இயற்றினவர். இவர் கடைச் 3: ங்க காலத் திருந்தவர். முந்தியவர் இடைச்கங்க காலத் திருந்தவர். பிந்திய நக்கீரருடைய இறையனாரகப்பொரு ளுரையால் அவருடைய அளப்பருங் கல்வித்திறமும் அக் காலத்திலே தமிழ்ப்பாஷைக்குண்டாகிய அபிவிருத்தியும் ஆற்றலும் இத்துணை ய வென்பது நன்கு புலப்படுகின்றது மேலே கூறப்பட்ட தருமியின் சரித்திரம்.

  • மின் காட்டுங் கொடிமருங்கு லுமையாட்கென்றும்,

விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கையோன் காண், நன் பாட்டுப் புலவனுக்காய்ச் சங்கமேறி, நற் கனகக் கிரிதருமிக் கருளினோன் காண்" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தால் நன்கு வலியுறுத்தப்பட்டிருக்கின் றது. கம்பராமாயணம் சோழ மண்டலத்திலே திருவழுந்தூரிலே பிறந்து சடையப்ப முதலியாராலாதரிக்கப்பட்டு விளங்கிய தமிழ்க் கவிச் சக்கரவர்த்தி, இவர் சடையப்ப முதலியார் வேண்டு