பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தென்மொழி வரலாறு. ராமாயணம் என்பது ஸ்ரீராமருடைய வரலாறு கூறு வதோரிதிகாசம். இது வடமொழியிலே வான்மீகி பகவா னாற் கூறப்பட்டது. இது ஆதிகாவியமென வும்படும். இது பாலகாண்டம் அயோத்தியா காண்டம், ஆரணிய காண் டம், கிஷ்கிந்தா காண்டம், லங்கா காண்டம், யுத்தகாண் டம், உத்தரகாண்டம், என ஏழுகாண்டமும் இருபத்து நாலாயிரங் கிரந்தமு முடையது. ஒவ்வோராயிரத்து முதற் சுலோகத்து முதற்பாதம் காயத்திரி மந்திரத் தொவ்வோரெழுத்தாற் றொடங்குதலின், இக்காவியம் காயத்திரி ரூபமெனப்படும். இவ்விராமாயணத்தைத் தமிழிற்காவியமாக மொழி பெயர்த்தவர், கவிச்சக்கிரவர்த்தியாகிய கம்பர். இவர் சாலிவாகன சகம். அனல் விளங்கிய புலவர். கம்பர் வான் மீகி ராமாயணத்தையே மொழி பெயர்த்தாரென்பது தேவபாடையி னிக்கதை செய்தவர் மூவரானவர் தம் முளு முந்திய - நாவினாருரையின்படி நான்றமிழ்ப் - பாவி னாலி துணர்த்திய பண்பரோ என்னுங் கம்பர் வாக்கா லுணரப்படும். முதலிற் செய்தவர் வான்மீகி. அதன் பின் னர்ச் செய்தவர் வசிட்டர். அதன் பின்னர்ச் செய்தவர் போதாயனர்.. கம்பராமாயணத்துச் சரித்திரம் பெரும் பாலும் வான்மீகி ராமாயணப்படியே யாயினும் வர்ணனை யெல்லாம் கம்பருடையனவேயாம். கம்பர் லங்கா காண்ட மென்பதைச் சுந்தர காண்டமெனப் பெயரிட்டு வழங்கு வர். கம்பராமாயணத்துச் செய்யுள் பதினாயிரம். எஞ்சிய ஈராயிரமும் ஒட்டக்கூத்தர்பாடல். கம்பர் பாடிய ராமா ய ணத்திலே செய்யுள் வன்மையும், சொற்சாதுரியமும், சந்தவின்பமும், பொருட்கம்பீரமும், சிருங்காரம், சோகம், வீரம், முதலிய ரசங்களும் பயின்று வருதலால், அது த மிழிலேயுள்ள இலக்கியங்களை யெல்