பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தென்மொழி வரலாறு கொண்ட வரலாறும், தேவர்சிறை நீக்கி அவரை விண் குடி யேற்றிய வரலாறும், அறுமுகக்கடவுள் தெய்வயானை வள்ளிநாயகி திருமணம் புரிந்தருளிய வரலாறும், இந்திர குமாரனான சயந்தனுக்கு வியாழப்புத் தேள் அசுரர் சிறைப் பட்டதற்குக் காரணங் கூறிய வரலாறும், பிறவுங் கூறும். இது அறு முகக்கடவு ண் மகிமையெல்லா மங்கை நெல்லிக் கனிபோல எடுத்து விரித்துரைக்குந் திவ்விய புராணமாய்த் தமிழ்ப்பெருங் காப்பியமாய் நிலவுவது. இதன் செய்யுட் கள் திராட்சகதலி இட்சுநா ளி கேர பாகங்கள் கொண்டன. கந்தபுராணம் போலும் சொல் வனப்பும் செய்யுள் ஒழுக்கும் பொருள் இனிமையும் கேட்போர் மனத்திற்பதியச் செய் யும் ஆற்றலும் வேண்டிய வேண்டிய இடங்கடோறும் வேதாகம சாத்திரப்பொருள்களை எளிதில் விளங்கும்படி தந்து கூறும் உபாயமும் உடைய நால் பிறிதில்லையென்றே கூறலாம். பத்திச்சுவையும் வீரம் முதலிய மற்றைச்சுவை களும் சமப்படக் கூறுவது இதைவிடப் பிறிதில்லை. இவ ருடைய செய்யுட்கள் எதுகைச் சிறப்பும் தொடைச் சிறப்பும் பெரிதுமுடையன வாய்ச் செவிக்குப் பேரின்பம் பயப்பதோடு எளிதிலே மனனம் பண்ணத்தக்க செம் பாகமு முடையன. இந்நூல் திரிசொற்களாலும் காடின் னிய பதங்களாலும் செவிக்குக் கர்க்கசமான புணர்ச்சி களாலும் இக்கடி னமெல்லாந் தாண்டிக் கற்கப் புகுந்த விடத்தும் பொருணயஞ் சிறிதும் பயவாமையாலும் விளக்கமடைந்துள்ள போலி நூல்கள் போல்வதன்று. இந்நூலைக் கச்சியப்ப சிவாசாரியர் சாலிவாகன சகாப்தம் எழுநாற் றில் இயற்றி யரங்கேற்றினார். இந்நூலை அக் காலத்தில் மடாலயங்கள் சிவாலயங்களிலே கிரமமாகப் படித்து யாவருக்கும் பயன்படுமாறு பொருள் சொல்லித் தத்துவார்த்தங்களையும் எடுத்து பதேசித்து வந்தார்கள். இக்காலத்தில் அவ்வழக்கம் அருகி வருகின்றது. கேட்