பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டாவதாகிய இசை நுகர்ச்சிக்குரியதாகிய இசைத் தமிழையும், ஆனந்த மேலீட்டினால் இசையோடு தொடர் புடையதாகிய கூத்தின் விகற்பங்களை விளக்கும் நாடகத் தமிழையும், வேறுவேறாகப் பிரித்து வழங்கிய தமிழ்மக்க ளது நுண்ணுணர்வு பெரிதும் வியக்கத்தக்கது. தமிழும் சம்ஸ்கிருதமும் மூலபாஷைகள் என மேலே கூறப்பட்டன. சம்ஸ்கிருதத்திலிருந்து அனேகபாஷைகள் தோன் றினது போலத் தமிழிலிருந்தும் மலையாளம் தெலு ங்கு கன்னடம் துளுவம் ஒட்டரம் சிங்களம் முதலிய அ னேக பாஷைகள் தோன்றின. இயற்றமிழ் எழுத்துச் சொல் பொருள் யாப்பு அணி என்னுமிவற்றை எடுத்துக் கூறுவது. அதற்குரிய பாக்கள், வெண்பா அகவற்பா கலிப்பா வஞ்சிப்பா மருட்பா என்பன. இசைத்தமிழ் இயற்றமிழெழுத்துக்களோடு மாத்திரையால் நீட்டப்படும் எழுத்துக்களுங்கொண்டு இசைவகை பண்வகைமுதலியன பெறச் செய்யப்படும் பாக்களையுடையது. கொச்சகம்முரி நிலை விருத்தம் முதலியன இசைத் தமிழுக்குரியன. நாட கத்தமிழ் பாவராக தாளங்களோடு கூடியது. அதற்குரிய பா வரிப்பாட்டு முதலியன. முத்தமிழையும் ஒருவாறு தெரிக்கும் தமிழ் நூல் சிலப்பதிகாரம் ஒன்றே. அதற்கு முந்திய நூல்களெல்லாம் இறந்தனபோலும். இசைத் தமிழிலக்கியங்களுள்ளே தேவாரமும் திருவாசகமுமே இறவாதெஞ்சியுள்ளன. இயற்றமிழிலக்கியங்களுள்ளும் இறந்தன பலவேயாயினும், இறவாதொழிந்தன இக்கா லத்தார்க்குப் போதிய அள வு உள. தமிழ்நாட்டிலே அகஸ்தியர் வந்த காலம் முதல் மூன் றாஞ்சங்கம் முடிந்தகாலம் வரையும் சேரசோழபாண்டியர் கள் என்னும் தமிழ்நாட்டு மூவேந் தருமே வழிவழியரசு செய்து வந்தார்கள். அதன்பின்னர் மூவேந்தரும் ஒருவர்