பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தென்மொழிவரலாறு. லிருந்து மொழிபெயர்க்கப்பட்டது பஞ்சாட்சர மகிமை, சிவராத்திரி மகிமை, உருத்திராட்ச மகிமை , பிரதோஷ மகிமை, விபூதிமகிமை, ஸ்ரீருத்திரமகிமை, முதலிய பல அரிய விஷயங்களை எடுத்துக் கூறுவது. வரகுணராம பாண்டியர். இவராற்றமிழிலே வடமொழியிலிருந்து மொழி பெயர்த்துப் பாடப்பட்டது வாயுசங்கிதை. இதிற் சிவ பரத்துவம் முதலிய அரிய விஷயங்கள் நன் கெடுத்துரைக் கப்பட்டிருக்கின்றன. இது பூர்வகாண்டம் உத்தரகாண் டம் என இரண்டு காண்டங்களுடையது. இது சைவ சமயிகள் யாவராலும் நன் காராயத் தக்கது. பொய்யாமொழிப்புலவர். துறையூரிலே வேளாளர் குலத்திலே அவதரித்துத் தமிழ்ப்புலமையும்சாபானுக்கிரகமும் பெரிதுமுடையராய் விளங்கியவர். அழிந்து போன தமிழ்ச்சங்கத்தை மீள வும் அமைத்து வளர்த்தல் வேண்டும் என்னும் பேரவாவுடை யராய் வணங்காமுடிப் பாண்டியன்பாற் சென்றனர். அவன் இவர் கருத்தை யுசா வியுணர்ந்து சங்கங்கூட்டுங் கருமத்தைப் பின்னர் யோசிப்பாம். இப்போது நமது சிவாலயத்தினுள்ளே ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் சங்கப் புலவர்களது விக்கிரகங்களெல்லாம் தலை துளக்கும்படி பாடும் பார்ப்போமென்றான். உடனே இவர், "உங்களிலே யானொருவனொவ்வேனோ வல்லேனோ - திங்கட்குலனறியச் செப்புங்கள் - சங்கத்துப் -- பாடுகின்ற முத்தமிழ்க்கென் பைந்தமிழு மொக்குமோ ஏடவிழ்தா ரேழெழுவீ ரே என்னும் வெண்பாவைக் கூறுதலும் அவ்விக்கிரகங்கள் ளெல்லாம் சிரக்கம்பஞ் செய்தன. இவ்வற்புதத்தைக்