பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 125 கண்டு மப்பாண்டியன் இவர் விண்ணப்பத்தைப் பொருட் படுத்தானாயினான். அதுகண்டு புலவர் தமது சோணாட்டை நோக்கிப் பல்லக்கேறி மீண்டார். அப்பொழுது பாண் டியன் மனைவியார் தமது பல்லக்கேறித் தொடர்ந்து போயிறங்கி இவருடைய பல்லக்குச் சுமப்போருளொரு வராயினர். அஃதுணர்ந்த புலவர் நீ நமக்குப் பல்லக்குத் தாங்கப்புகுந்த கருத்தை யுணர்ந்தோம். நாம் வெகுண்டு அரசனை முனிவா மல்லேம். அஞ்சற்கவென்று அவ்வுத்த மியைத் தடுத்து, உமையா ழு நீயு மொருங்கொப்பே யொப்பே உமையாளுக் கங்குண்டோ ரூனம் - உமையாடன் பாகந்தோய்ந்தாண்டான் பலிக்குழன்றான் பாண்டிய ஆகந் தோய்ந் தாண்டா ன ரசு (னின் என்று வாழ்த்திப் போயினர். இவர் சோழராசாவினது மந்திரியாகிய சீநக்கராய னுக்குப் பிரியா நட்பினர். ஒருநாள் சீதக்கராயன் சயனிக் குங்கட்டிலிலே அவனும் புலவருமாக விருந்து பொழுது போய பின்னர் நெடுநேரம் அளவளாவிக் கொண்டிருக் கையில் புலவர் தமக்கு நித்திரை வந்ததென்று கூறி ராயனைப் போசனத் துக்குப் போகுமாறு செய்து அக் கட்டிலிற்றானே ஒருபக்கமாக நித்திரை போயினர். ராயன் போசனம் முடித்துக்கொ ண்டு நிலாமணி மேடையிற் சென்று சிறிது நேரம் போக்கி மீளுமுன்னே ராயன் மனைவியும் அக்கட்டிலில் படுத்துறங்குகின்ற வரைத் தன் கணவனென் றெண்ணி ஒருபக்கத்திற்படுத்து நித்திரை போ யினாள். அதன் பின்னர் ராயனும் போய்ப் படுத்துறங்கினான். வைகறையிலே புலவர் முதலிலே யெழுந்தார். அவ்வரவங்கேட்டு அரசனும் எழுந்தான்.