பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 127 சொல்லாற்றல் பொருளாற்றல்கள் தமிழ்ப்புலவர்களைப் பிரமிக்கச் செய்வன வென்றால் மற்றினிக் கூறுவதென்னை. இவர் தொண்டை நாட்டிலுஞ்சிறிது காலம் வசித்தவ ரென்பதும், அக்காலத்திலேயே முருகக்கடவுள் வாயால், விழுந்ததுளி யந்தரத்தே வேறொன்றும். என்னும்வெண் பாப் பாடப்பெற்றவரென்பதும். தொண்டைமண்டல சதகத்தால் விளங்குகின்றது இவர் அதிவீரராமபாண் டியன் காலத்துக்குச் சற்றுமுன்னே யிருந்த வணங்கா முடிப் பாண்டியன் காலத்தவராதலின் இவர் காலம் சற்றேறக்குறைய ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது. வில்லிபுத்தூராழ்வார். இவர் திருமுனைப்பாடி நாட்டிலே சனியூரிலே வைஷ் ணவப் பிராமண குலத்திலே வீரராகவாசாரியர்க்குப் புத்திரராகவவதரித்த வர். இவர் தமிழிலிலும் வடமொழி யிலும் மிக்கவல்லவர் ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் நால்வகைக் கவியும் பாடவல்லவர். இவருடைய புகழ் தமிழ்நாடெங்கும் வியாபித்த து. வரபதியாட் கொண்டா னென்னும் அரசன் இவரைத் தமது சமஸ் தான பண்டிதராக்கி இவரைக்கொண் டுடா.கா பாரதத்தைத் தமிழிலே பாடுவித்தான். அது பாடி முடிந்த பின்னர் தம் முடைய கல்வித்திறமையைத் தமிழ்நாடெங்கும் நாட்ட வேண்டித் திக்குவிஷயஞ் செய்யப் புறப்பட்டார். புறப் பட்டுச் சேர சோழ பாண்டிய நாடெங்கும் தம்முடைய திறமையை நாட்டித், தம்மைக் கண்டு அடிபணியா தெதிர்த்த புலவர்களைத் தமது கையிலிருந்த தோட்டியார் செவியை ஊறுபடுத்தி மானபங்கஞ் செய்து மீண்டு செல் லுகின்றவர் திருவண்ணாமலையை யடைந்தார். அங்கே அருணகிரிநாதர் இவருடைய கல்விச்செருக்கை யடக்கக் 3 = 'E.