பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் மத்திய நிலையையும் இக்காலத்து நிலையையும் ஆராய்ந்து ஒரு நூல்செய்தல் வேண்டும் என்னும் பேரவா எமதுள்ளத் தே நெடுங்காலம் கிடந்தது ஆசை நாணமறியாதென்னும் பழமொழிப்படி, தமிழ்நாட்டிலே, கற்றுவல்ல பண்டித சிரோமணிகள் பலர் இருக்கவும், நிரம்பாத கல்வியறிவு சிறிதுடைய யாம் இப்பொருண்மேல் நூல் செய்யப்புகுந் தமையை நோக்கப் பெருநாணந்தருவதாயினும் கற்றார் குற்றங்களைந்து குணம் கொள்வார் என்று துணிந்து முயன் றாம். தமிழ்நாட்டிலே விளங்கிய நல்லிசைப் புலவர் எண் ணிலர். அவர்கள் செய்த நூல்களோ கணக்கில. அவர் களுடைய கல்வியாற்றலோ இக்காலத்தார் எளிதில் ஆரா ய்ந்து தெளியுந்தன்மைத்தன்று அறம் பொருள் இன்பம் வீடென்னும் நாற்பாற் பொருண் மேலும் நூல்செய்வித் துச் சங்கங் கூட்டி யாராய்ந்த அரசர் களோ பல்லா யிரவர். அர சருள்ளும் பெரும்புலமை படைத்தோர் ஆயிரவர். பண் டைத் தமிழாராய்ந்த சங்கங்களோ பன்னெடுங்காலமிருந் தன. புஸ் தகமண்டபங்களோ அனந்தம் தமிழ்ச்சொற் களுள்ளும் வழங்கா தொ ழிந்தன எத்தனை யோபல நடுவட் காலத்தாரால் வழங்கப்பட்ட சொற்களும் எத்தனையோ பல. பண்டைகாலத் தாராற் றழுவப்பட்ட சொற்களும் எத்தனையோ பல. இந்நிலைப்பட்ட தமிழின து வரலாற்றை ஒரு நூலாகவமைத்து இயற்றுவதென்றால் கம்போல்வார்க் கெளியதன்று. ஆயினும் இயன்றவாறு ஆராய்ந்து இந் நூலை இயற்றினேம். தமிழ்மொழியினது காலம் இலக்கண்மில்லாத காலம் குமாரமென்னும் இலக்கணகாலம் அகஸ்திய விலக்கண காலம் முதற்சங்ககாலம் இடைச்சங்க காலம் கடைச்சங்க காலம் இடைக்காலம் நான்காஞ்சங்ககாலம் பின்னர்க்கா லம் என வகுக்கப்படும். இந்தக்கிரமமாகவே இந்நூலை வகுத்தியற்றினேம். நாவலர்கோட்டம்,) ஆ. முத்துத்தம்பிப்பிள். 23-5-17 '