பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 145 யாவர்க்கும் படைக்கப்பட்டன. சுவாமிகள் தமக்கு அச 1 மாமிசமும் பன்றி மாமிசமும் சமமே யென்று கூ ற, சக்கர வர்த்தி முதலியோர் யாவரும் பன்றி யென்னுஞ் சொற் கேட்டமாத்திரத்திலே நி ஷேத மென்று கூறி பெழுந்தார் கள். அ து கண்ட சுவாமிகள் அவர்களை யிருக்கும்படி கையமர்த்தி உங்கள் கலங்களிலே படைக்கப்பட்டிருப்பன என்னவென்று பாருங்கள் என்றார். அவர்கள் தங்கள் கலங்களிலே யிருந்த அன்னங்க றிகளெல்லாம் போய் அதிரம்மியமான தீங்கனி வகைகளே யி ருப்பக் கண்டு அதிசயித்துச் சுவா மிகளோடு தா ழும் வயிறா ரவுண்டார்கள் அவ்வற்புதத்தைக் கண்ட சக்கரவர்த்தி சுவாமிகளிடத்தில் மிக்க பத்தியும் அபிமானமு முடையராகி, அவர்கள் கேள் விப்படி சைவ சமயிகளுடையனவாயிருந்து பின் னர்த்துருக்கராற்கவரப்பட்ட கங்கைக்கரையின்கணுள்ள தீர்த்தத் துறைகளையும், விசுவநாதசுவாமி கோயிலுக்கும் அனேகமானியங்களையும் சைவத் துறவிகளுக்காக அனேக மடாலயங்களையும் கொடுத்தான். சுவாமிகளுடைய புலமை ஒப்புயர்வில்லதென்பது அ வரியற்றிய நூல்களால் நிச்ச யிக்கப்படும். அவராற் செய்யப்பட்ட நூல்கள் கந்தர்கலி வெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் நீதிநெறி விளக் கம், சிதம்பரச்செய்யுட்கோவை, மதுரைக் கலம்பகம், காசிக்கலம்பகம் முதலியன. இவர் காலம் இரு நூற்றெழு பத்தைந்து வருஷங்களுக்கு முன்னுள்ள து. வீரைமண்டலவர் இவர் வீரைநகரத்தில் இருந்த ஒரு சைனர். விஜய நகரத்திலே அரசு செய்திருந்த கிருஷ்ணராயன் காலத் தவர். இவர் செய்த சூடாமணி நிகண்டு திவாகரத்துக்கும் பிங்கலத் துக்கும் வழி நூல் இவர் இந் நூலை விருத்தப் பா வினாற் செய்த னர். வீண் அடை சொல்லின் றிப் பாடு 19