பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தென்மொழி வரலாறு. வதில் இவர் மகா சதுரர். இந்நூல் இலக்கிய நூலுணர்ச் சிக்கு இன்றியமையாத தாதலின் கருவி நூலெனப்பட் டது. நிகண்டும் இலக்கணமுங் கற்றே இலக்கிய நூல் களை ஆராயத் தொடங்குதல் வேண்டும். இதுவே முன் னோர் அநுசரித்து வந்த முறையாம். இதனை இக்காலத்து மாணாக்கரும் அநுசரித்து வருவாராயின் இலக்கியப் பயிற்சியிலிடர்ப்படாது கற்றுத்தேறுவர். இந்நூல் பன் னிரண்டு தொகுதியும் ஆயிரத்து நூற்றுத்தொண்ணூற்று நான்கு செய்யுட்களுமுடையது. அரசகேசரி. ஈழமண்டலத்திலே சாலிவாகனசகம் ஆயிரத்து நா னூற்றின் மேல் அரசுபுரிந்த பரராசசேகரன் மருகன். இவ்வரசகேசரியே காளிதாசன் வடமொழியிலியற்றிய காவியமாகிய இரகு வமிசத்தைத் தமிழிலே 2500 விருத் தப்பா வினாற் பொருணயம் சொன் ன யம் கற்பனாலங்கார முதலிய நூல்வனப்புக்கள் அமையப்பாடித் திருவாரூரிற் சென்று அரங்கேற்றியவன். ஞானப்பிரகாச சுவாமிகள். ஈழநாட்டிலே திருநெல்வேலி யிலே வேளாளர் குலத் திலே பிறந்து உரிய காலத்திலே கெளட்தேசஞ் சென்று சமஸ்கிருதங்கற்று வல்லராகி மீண்டு திருவண்ணாமலையை யடைந்து அங்கு மடாதிபதிபாற் காஷாயம் பெற்று அங் கிருந்து பௌஷ்கராகமத்துக்குச் சமஸ்கிருதத்திலேசிறந்த வியாக்கியானமும் , சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை முதலிய அனேக நூல்களுஞ் செய்து பிரசித்தியுற்றவர். இவர் சித்தியாருக்குத் தமிழிலு மோருரையியற்றினவர். இவர் தம்முரையிலே சிவசமவாதம் நாட்டுவர். முந்நூற்