பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தென்மொழிவரலாறு. மொழி தென்மொழி யிரண்டினும் வல்லவர். சிவஞான போதத்திற்குத் திராவிட மகாபாஷியமும், சிவஞான சித் தியார்க்குப் பொழிப்புரையும், சிவஞான போதத்திற்குச் சிற்றுரையும், தொல்காப்பியமுதற் சூத்திர விருத்தியும், செய்தவர். சமஸ்கிருத நூல்களைத் தமிழிலே வசன ரூப மாகவும், செய்யுள் ரூபமாகவும் மொழி பெயர்ப்பதில் இவர்க்கிணையாயினார் பிறரில்லை. அன்னம்பட்டி யம் சிவ தத்துவ விவேகம் முதலியன இவர் செய்த மொழிபெயர்ப் புக்கள். தமிழ் இலக்கண வுணர்ச்சியும் தர்க்க சாஸ்திர வாராய்ச்சியும் நிரம்பியவராதலால் அவர் செய்த நூல்க ளெல்லாம் சிரோரத்தினங்களாக விளங்குகின்றன. பிறர் நூல்களிலே குற் றந்தெரித்தலில் நக்கீரரும் அவர்க்கிணை யாகார். பாஷியமொன்றேனுமில்லாத பாஷையென்று வடமொழியுடையோர்தமிழை இகழ்ந்து வந்த குற்றத்தை நீக்கினது அவர் செய்த திராவிட பாஷியமே. அதற்கு முன்னே நாலாயிரப்பிரபந்த பாஷியம் உண்டென்றாலும் அஃது இத்திராவிட பாஷியம் போலச் சிறந்த தன்று. தாயுமானவர். இவர் இற்றைக்கு நூற்றெழுபது வருஷங் களுக்கு முன்னே திருச்சிராப்பள்ளியிலே அரசு செய்த விஜயரங்க சொக்கநாத நாய கர்க்குச் சம்பிரதியாகவிருந்த கேடி லியப் பிள்ளைக்கு அருந்தவப் புதல்வராக அவதரித்தவர். இவர் சிவயோகியாகி அற்புத பத்திரசங்கான் றொழுகுவ தாகிய அனேக பாக்களைப் பாடியவர். அப்பாக்கள் தாயுமானவர் பாடலெனப்படும். அந்நூலிலே சமஸ்கிருதச் சொற்கள் மிக மலிந்து கிடத்த லின் அவர் வடமொழியிலும் வல்லுந் ரென்பது நன்கு துணியப்படும் இவருடைய பாடல்கள் தோத்திரரூபமாக வுள்ளன. இசையோடு ஓதப்படுமிடத் துக் கன்னெஞ்சையுங் கரையச்செய்யு மியல்பின. தமது