பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தேன்மொழி வரலாறு. சிவப்பிரகாச சுவாமிகள். இவர் பிரபுலிங்க லீலை, திருக்கூவப்புராணம், சித்தாந்த சிந்தாமணி, வேதாந்த சூடாமணி, சிவப்பிரகாச வியாசம், சிவநாம மகிமை, தர்க்க பாஷை, சோணசைலமாலை, நன் னெறி, நால்வர் நான்மணிமாலை, வெங்கையுலா, வெங்கைக் கோவை முதலிய நூல்கள் செய்தவர். காஞ்சீபுரத்திலே பிறந்து சிந்து பூந்துறையிலே வெள் ளியம்பலத் தம்பிரா னிடம் பாடங்கேட்டவர். இலக்கண இலக்கியங்களில் மகாச துரர். கற்பனைக்களஞ்சியம் சாதியில் வீரசைவர். இவர் இற்றைக்கு இருநூற்றிருபது வருஷங்களுக்கு முன்னர் விளங்கியவர். சிவாக்கிரயோகி. இவர் தஞ்சாவூரிலே சரபோஜி மகாராசாவுடைய சபையிலே மணவாள மாமுனியென்னும் வைஷ்ணவசிரேஷ் டரோடு பதினேழுநாள் வரையில் அவர் கடாவிய வினாக் களுக்கெல்லாம் ஏற்றவாறு விடையளித்துச் சிவபரத் துவம் நாட்டி வரும்போது பதினேழாநாளிரவு மணவாள மாமுனிவர் படித்தார் சிவாக்கிரயோகி எழுந்தருளி யிருந்த படத்திற் றீக்கொளுவினார்கள். அம்மடம் முழு துஞ் சாம்பராகியும் சிவாக்கிர யோகி சிறிதும் வருந்தாது நிஷ்டையிலிருந்தனர். அதனைக் கேள்வியுற்ற சரபோஜி அம் மடத்திற்குத் தீயிட்டவர்களை யெல்லாம் ஓரறையிற் சேர்த்து அக்கினிக்கிரையாக்கினான். சிவாக்கிரயோகிகள் செய்த நூல்கள் சிவஞான போத பாஷியம், சித்தாந்த தீபிகை, தத்துவ தரிசனம், பாஞ்சராத்திரசபேடிகை என் பவைகளாம்.