பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. - 151 ஒழிவிலொடுக்கம். இது செய்தார் கண்ணுடைய வள்ளல். இது பொது விலுபதேசம், சத்திநிபாதத்துத் தமரொழிவு, யோகக் கழற்றி, கிரியைக் கழற்றி, சரியைக் கழற்றி, விரத்திவிளக் கம், துறவு, அருளவத்தைத் தன்மை, வாதனை மாண்டார் தன்மை , நிலையியல்பு எனப் பத்தியல்களுடையது. இது ஆன் மாப் பாசோ பாதியினீங்கி பருளி லழுத்தித் தூய்மை யுறுதற்குக் கருவியான ஒருஞான நூல் வேதாந்தசித்தா ந்தமிரண்டையுந் தம்முண்முரணாதவாறு அவ்விரண்டன் பொருள் பெரும்பான்மை யா னொருப்படுத்துரைப்பது. இது அறுவகை யகச்சமயங்களுள் வைத்துச் சிவாத்து வி தம் போதிப்பது. ஓப்பிலாமணிப்புலவர் இவர் தஞ்சை ராச சமஸ்தானத்தில் விளங்கிய ஒரு சிறந்த தமிழ்ப்புலவர். இவரே தமிழில் சிவரகசியஞ் செய் தவர். இந்நூல் ஏறக்குறைய நாலாயிரஞ் செய்யுளு டையது. இந் நூலிலே சிவ பூசா மகிமை, விபூதிமகிமை பஞ்சாட்சர மகிமை, சரியை கிரியை யோக ஞான விஷ யங்கள் முதலியன மிக விரிவாகக் கூறப்படும் அபிராமிப்பட்டர். இவ்வந்தணர் நூற்றறுபது வருஷங்களுக்கு முன்னே திருக்கடவூரிலே பிறந்து தமிழும் சமஸ்கிருதமும் நன்கு கற்றுத் தமிழ்ப்புலமை நிரம்பியவராய்த் தேவி பூசையே அதி சிரத்தையோடு செய்பவராயொழுகுநாளிலே தஞ்சை மாநகரஞ்சென்ற்ரசனைக்கண்டு அவன்பாற்றமது கல்விச் சாதுரியத்தைக் காட்டி அங்கே சிலநாள் வசித்தார். ஒருநாள் அரசன் அவரை நோக்கி இற்றைத் திதியென்ன