பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. தமிழ் நாடு. பூர்வ எல்லை. தமிழ் வழங்கு நிலம் தமிழ் நாடெனப்படும். அது வடக்கே வேங்கட மலையையும் தெற்கே குமரியையும் கிழக்கும் மேற்கும் கடலையும் எல்லையாக அடைாது. தொல்காப்பியர் கபாடியும் தொல்காப்பியத்துக்கும் பாயிரஞ் சொன்னவருமாகிய பனம்பாரனார் வடவேங் கடந் தென்குமரியாயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என வடக்குந் தெற்கும் பிற நாடுகள் இருந்தமையால் வடக் கெல்லையுந் தெற்கெல்லையுங் கூறிக் கிழக்கினும் மேற்கி னும் வேறுபாடின்மையாற் கிழக்கெல்லையும் மேற்கெல்லை யுங் கூறாதொழிந்தார். தெற்கே பிறநாடிருந்தமை எவ் வாறு பெறப்பட்டதெனிற் கூறு தும். கடல் கொண்ட நாடுகள். குமரியென்றது குமரியாற்றை. அது தொல்காப்பி யர் நூல் செய்த காலத்தேயிருந்தது. அதற்குத் தெற் கிலே ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரைநாடு ஏழ்முன் பாலை நாடு ஏழ்பின் பாலைநாடு ஏழ்குன்றநாடு ஏழ்குணகாரைநாடு ஏழ்குறும்பனை நாடு என்னும் நாற்பத்தொன்பது நாடுகள் ளிருந்தன. பஃறுளியாறென வோராறுமிருந்தது. அவ் வாறுள்ளிட்ட நாற்பத்தொன்பது நாடுகளும் குமரிநாடும் குமரியாற்றின் வடகரைவரையும் கடல் கொண்டழிந்தன. இது நிகழ்ந்தது தொல்காப்பியர் நூல் செய்த காலத்துக் குப் பன்னெடுங்காலத்துக்குப்பின்னர் . (கடல் கொண்ட செய்தி சிலப்பதிகாரம் வேனிற்காதை உரையினும் இறை