பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தென்மொழி வரலாறு. முதலிய அரும்பெரும் நூல்களையெல்லாம் வழுக்களைந்து சுத்தபாடமாக்கி, அச்சிட்டு உலகத்துக்கு பகரித்தார். அவற்றுள், திருக்குறள் பரிமேலழகருரையும், திருக் கோவையாருரையும், இராமநாதபுரத்து மகா ராசா வினது மந்திரியாராகிய பொன்னுச்சாமித் தேவர் இவ ரைத் தமது நாட்டிற் சந்தித்த பொழுது, "இந் நூல்களை ஆராய்ச்சி செய்து சுத்த பாடமாக்கி அச்சிடவல்லார் தங் களை யன்றிப் பிறரொருவரையும் காண்கிலேம் என்று கூறி அதற்கு வேண்டும் பொருள் கொடுத்து இவரைக் கொண்டு திருத்தி அச்சிடுவிக்கப்பட்டன . திருக்குறள், திருக் கோன வயார், நன்னூல் விருத்தி யுரை, தொல்காப்பியச் சொல்லதிகாரம், சேனாவரைய நரை முதலிய நூல்கள் இவராற் றிருத்தி, அச்சிடப்படா திருக்குமாயின், இந்நாளிலும் அவற்றை நாம் ஓலைப்புத் த கங்களிலேயே படித்துச் சங்கடப்பட்டு மலைய வேண்டிய வர்களாவம். இந்நூல் களைச் சுத்தபாடமாக்கித் தரும் பொருட்டு இவர் அவதாரஞ்செய்தாரென்றே நாம் கொள் ளுதல் வேண்டும். இவர் அவதாரஞ்செய்திலரேல், அவற் றைநாம் இக்காலத்திற் காண்பதுமில்லையாம். இவர் தமி ழபிவிருத்தியின் பொருட்டும். ன ச ெசாயாபிவிருத்தியின் பொருட்டும் தம் மாயுட்காலமுழுவதையும் போக்கியவர். இவர் தாமீட்டிய செல்வத்தை யெல்லாம் ஒரு சிறிதும் புற த்தே போகா வண்ணம் இவ்விரண்டற்குமே யாக்கிவைத் தார். இவ்விரண்டையும் பரிபாலிக்கும் பொருட்டே தஞ் சுற்றத்தாருடைய தொடர்பை முற்றத் துறந்தார். ஏனைய கல்விமான்களைப் போலச் சைவசீலங்களைப் பேச்சளவிற் காட்டாமல் தம்மொ ழுக்கத்தாலும் எடுத்து நாட்டினவர். இறக்கும்போது இவருக்கு வயசு ஐம்பத் தேழு. இவர் எவ்விஷயங்களையும் ஐயந்திரிபற வெடுத்து