பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. 155 (. L. | 5 மாணவர்க்குப் போதிப்பதிலும், சமயவிஷயமேயாயினும் பொது விஷயமேயாயினும் ஒன்றையெடுத்துத் தீரவிசாரி த்துத் தர்க்கமுறையாகப் பிரமாண பத்தோடு எப்பெருஞ் சபையிலும் எத்துணைப் பெருமாற்றலுடையோரும் மற் றெத்திறத்தினரும் அங்கீகரிக்கும் வண்ணம் நாட்டிப் பிரசங்கிக்கும் சாதுரியத்திலும், கேட்போருள்ளத்தைப் புறஞ்செல்லவிடாது தம்மாட்டுக் கவரும் வாக்குவன்மை யிலும், கடன் மடைதிறந்தாலொப்பச் சொற்பஞ்சமின்றி வாக்கு மழை பொழியும் அற்புத ஆற்றலிலும், இவர்க் கிணை யாவாரொருவரை நாம் இன்னுங் காண்கிலேம். சரவணப்பெருமாளையர். இவர் திருத்தணிகையிலே வீரசைவர் குலத்திலவ தரித்துச் சென்னை யிலே யிருந்து தமிழ்க்கலை வளர்த்து இற்றைக்கு முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னே அருவுடம்பு கொண்டவர். நாலடியார், நன்னூல், நைஷ தம், திருவள்ளுவ மாலை, நன்னெறி முதலிய நூல்களுக் குரையும், பூகோ ள தீபிகை, பாலபோத இலக்கணமுதலிய நூல்களும் செய்தவர் இவரே. இவர் செய்த திருவள்ளுவ மாலையுரை மிக்க திட்ப நுட்ப மமைந்து புலவோருள்ளத் திற்கு அதிசயானந்தம் பயப்பது. இவர் செய்த நைஷதவுரை முற்றுப்பெற்றிருக்கு மாயின் அதற்கிணை பிறிதொன் றெக்காலத்து முள தா காது. மீனாட்சிசுந்தரம்பிள்ளை. இவரும் ஆறுமுகநாவலரும் ஒரே காலத்தவர்கள். இவர் மகா வித்துவான் என்னும் பட்டாபிதானம் பூண்ட வர். இவர் பாடும் வன்மையிலே கம்பரிலுஞ் சிறந்தவ