பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s. (. தேன்மொழிவரலாறு. 161 ணஞ் சொற்சீர்த்தாகி நூற்பாற் பயிலு மென்றலின்) ஏனையடிக் ளெல்லாஞ் செந்தூக்கு. வடவேங்கடந் தென் குமரியெனவே யெல் லையும், எழுத்துஞ் சொல்லும் பொருளுநாடி யெனவே நுதலிய பொருளும் பயனும் யாப்பும், முந்து நூல் கண்டெனவே வழியும், முறைப்பட வெண்ணியெனவே காரணமும், பாண்டியனவையத் தெனவே காலமுங் களனும், அரிற்பத் தெரிந்தெனவே கேட்டோ ரும், தன் பெயர் தோற்றியெனவே யாக்கியோன் பெயரும், நூற் பெயரும் பெறப்பட்டன. தொல்காப்பியமென்பது மூன்றுறுப் படக்கிய பிண்டம். பொருள் கூறவே யப்பொருளைப் பொதிந்த யாப்பிலக்கணமு மடங்கிற்று. நூறு கோணங் கொணர்ந்தானென் றாலவை பொதிந்த கூறையு மவையெனவடங்குமாறுபோல இனி இவ்வாறன்றிப் பிறவாறு கண்ணழ்வு கூறுவாருமுள ராலெனின் வேங்கடமுங் குமரியுமெல்லையாக வுடைய நிலத் திடத்து வழங்குந் தமிழ் மொழியினைக் கூறுநன் மக்கள் வழக்குஞ் செய்யுளு மென் றாற் செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந் தமிழ்நாடு பன்னிரண்டினும் வழங்குந் தமிழ் மொழியினைக் கூறுவாரை நன் மக்களென்றா ரென்று பொருடருதலானு மவர் கூறும் வழக்குஞ் செய்யுளும் கொண்டெழுத்துஞ் சொல்லும் பொருளுமா ராய்தல் பொருந் தாமையானு மவர் கூறும் வழக்குஞ் செய்யுளுமாகிய விருகாரணத் தானு மெழுத்துஞ் சொல்லும் பொருளு மா ராய்ந்தாரெனின் அகத்தியர்க்கு மாறாகத்தாமு முதனூல் செய்தாரென்னும் பொரு டருதலானு மங்ஙனங் கொடுந் தமிழ் கொண்டி.லக்க எணஞ் செய்யக் கருதிய வாசிரியர் குறைபாடுடையவற்றிற்குச் செந்தமிழ் வளக். கையு முந்து நூலையு மா ராய்ந்து முறைப்பட வெண்ணினாரெனப் பொருடருதலானுமது பொருளன் மை யுணர்க. இன்னு முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணி யென் றதனானே முதல்வன் வழி நூல்செய்யுமாற்றிற் கிலக்கணங் கூறிற்றிலனே னு மந் நூல் செய்த முறைமை தானே பின்பு வழி நூல் செய்வார்க் கிலக்கண மாமென்பது கருதியிவ்வாசிரியர் செய்யுளியலிலு மரபியலிலு மந் நூல் செய்யு மிலக்ணமு மதற்கு பை யுங் காண்டிகையுங் கூறு மிலக்கணமுங் கூறியவதனையே மீண்டும் கூறினாரென்றுணர்க. அவையவ்வோத்துக்களானுணர்க.