பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தென்மொழி வரலாறு. அடியார்க்கு நல்லாருடைய வசனநடை. இவ்வியலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய்யுளை அடிகள் செய்கின்ற காலத்து இயற்றமிழ் நூல் தொல்காப்பியமா தலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பா இலக்கணத்தன வாத லானும் அந் நூலின் முடிபே இதற்கு முடி பென் றுணர்க. அந்நூலிற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பாவும் இனமும் என நான்கினீ க்கி அப்பாவினைத் தொ கைவரையறை யான் இரண்டென வடக் கியும், விரிவரையறையான் ஆறென விரித்தும், அவற்றை அறம் பொருளின் பத்தாற் கூறுக வென்றுங் கூறிப்பின்பு அம்மைமுதலிய எட்டு வனப்பும் தொடர் நிலைச் செய்யுட்கு இலக்கணமென் று கூறியவர், இழுமென் மொழியான் விழுமியது நுவலினும், பரந்த மொழியானடி நிமிர்ந் தொழுகினும்" என்பதனாற் குவிந்து மெல் லென்ற சொல்லானும், பரந்து வல்லென்ற சொல்லானும் அறம் பொருளின்பம் பயப்ப வீடென்னும் விழுமிய பொருள் பயப்ப. ஓர்கதைமேற் கொச்சகத்தாலும், ஆசிரியத்தானும், வெண்பா வெண்கலிப்பாவானும், மற்றும் இன்னோரன்ன செய்யுட்களானும் கூறுகவென் றமையான், இத்தொடர்நிலைச் செய்யுள் அங்ஙனங் கூறிய தொடர்கிலையென வுணர்க. முந்து நூல்களிற் காப்பியமென்னும் வடமொழிப் பெயரின் றேனும் ஆசிரியர், வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ, யெழுத் தொடு புணர்ந்த சொல்லாகும்மே" என்றார். 'ஆகும்மே' என்ற இலேசினான் உய்த்துணரற் பாலதனை மாணாக்கன் ஐயந்தீர்தற் கன்றே பின்னும் 'சிதைந்தன வரினு மியைந் தன வரையார் என் றாரெனக் கொள்க. அன்றியும் பெரியதனைப் பெருங்காப்பிய மென்றே கூறி மறுக்க வேண்டுத லானும், சான்றோர் செய்யுட் களிலும் 'கூத்தியரிருக்கையுஞ் சுற்றியதாகக், காப்பியவரசனைக் கலந்தவை சொல்லி என இரண்டாம் ஊழிய தாகிய கபாடபுரத் தின் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தி யாகிய நிலந்தரு திருவிற் பாண்டியனவைக் களத்து அகத்தியனாருந் தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழிமோசியாரும், வெள்ளூர்க் காப்பியனாரும், சிறுபாண்டரங்கனாரும், மதுரை யாசிரியன் மாறனாரும், துவரைக்கோமானும், கீரந்தையாருமென்