பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தென்மொழிவரலாறு. டுஞ் செய்யப்படுவதாகலின், அதனை முதற்கட்கூறுவான்றொடங்கி, எடுத்துக் கொண்ட இலக்கியமினிதுமுடிதற்பொருட்டுக் கடவுள் வாழ்த்துக்கூறுகின்றார். கடவுள் வாழ்த் து. அஃதாவது கவிதான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக்கொ ண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை யெனவறிக: என்னை? சத்துல முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற்கடவுளோடு இயைபுண்டாகலான், அம்மூன்று பொருளையுங் கூறலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறை மையாகலின், இவ்வாழ்த்து அம் மூவர்க்கும் பொதுப்படக் கூறினா ரென வுணர்க. நக்கீரருடைய வசனநடை ). அக்காலத்துப்பாண்டியனாடு பன்னிருயாண்டு வற்கடஞ் செ ன்றது. செல்லவே, பசி கடுகுதலும் அரசன் சிட்டரையெல்லாங் கூவி, 'வம்மின், யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என்தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் நுமக்கறிந்தவாறு புக்கு, நாடு நாடாயினஞான்று என்னை யுள்ளி வம்மின் என்றான் என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியா ண்டு கழிந்தது. கழிந்தபின்னர், நாடுமலிய மழை பெய்தது. பெ ய்தபின், அரசன் இனி நாடுநாடாயிற்றாகலின் நூல்வல்லாரைக் கொணர்க வென்று எல்லாப்பக்கமும் போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத்தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலே மென்று வந்தார். வர, அரசனும் புடைபடக்கவன்று, என்னை? எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமேயெனின், இவைபெ ற்றும் பெற்றிலேம் எனச்சொல்லாநிற்ப; மதுரை ஆலவாயின் அழனி றக்கடவுள் சிந்திப்பான்: என்னை பாவம்! அரசற்கு கவற்சி பெரிதாயிற்று. அது தானும் ஞானத்திடைய தாகலான் யாம் அதனைத் தீர்க்க ற்பாலம். என்று, இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து, மூன்று செப்பித ழகத் தெழுதிப் பீடத்தின் கீழிட்டான்.