தென்மொழிவரலாறு. 175 நெற்சிறப்புடைக் காரணம், நிலனும் நீரும் முதலாகவுடையன. பொதுக்காரணம், அவை பயற்று முளை முதலாயுடையன வற்றிற் குங் காரணமாகலான், அது போல விளங்குந் தெய்வமும் இயற் கையும் முன் னுறவும் பொதுக் காரணமுங், காமஞ் சிறப்புக் காரணம் முமாகலாற் காமப்புணர்ச்சி யெனப்பட்டது. இனி இருவயினொத்தல் என்பது என் சொல்லியவாறோ வெனின், புணராத முன் நின்ற அன்பு புணர்ந்தபின்னும் அப் பெற்றியே நிற்குமென் றவாறு. ஆயின் உலகினோடொவ்வா து பிற உலகினிற் புணராதமுன் நின்ற அன்பு புணர்ந்த பின்றைத் தவிர்த லானும் உண்ணாத முன் நின்ற வேட்கை உண்ட பின்றைத் தவிர்த லானு மென்பது என்றார்க்கும் அறியாது சொல்லுதி, இஃது உலகத்துள்ள பான்மை முன்னே கேட்டாயன்றே, இல்ல தினியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டதென்பது. நூல் எடுத்துக் கோடற்கண்ணே சொல்லிப் போந்து இனியொருகாலும் உலகி னோடொவ்வா தெனில் வேண்டுமோ வென்பது. ஆயின் உலகினுள் அன்பன்றாகப் புணராதமுன் நின்ற அன்பு புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நிற்குமெனிற் புணர்ச்சியினாய பயமில்லையாம் பிற: உண்ணாமுன்னின்ற வேட்கை உண்டபின்றையும் அப்பெற்றியே நிற்குமாயின் உண்டதனானாய பயமில்லை, அது போல என்றார்க்கு : அதுவன்று; புண ராதமுன்னின்ற வேட்கை புணர்ச்சியுட் குறை படும். அக் குறைபாட்டைக் கூட்டத்தின் கட் தம்முட்பெற்ற செய் குணங்க ளாய அன்பு நிறைவிக்கும்; பின்னும் முன்னின்ற அன்பு கூட்டத்திற் குறைபடும், அதற்கிடையின்றியே குணத்தினானாய அன்பு நிறைவிக்கும்; நிறைவித்த பின்னும் முன்னின்ற அன்பு கூட்டத்திற் குறையாது எஞ்ஞான்றும் ஒருபெற்றியேயாய் நிற்கு மென்பது. இனி அவ்வகை புண ராதமுன்னும் புணர்ந்த பின்னும் ஒத்த . அன்பினனாய் நின்ற தலைமகன் பிரியுமென்றுமோ? பிரியானென்று மோ? பிரியுமென்றுமே யெனின், அன்பிலனாயினானாம்; என்னை பிரிவு அன்பிற்கு மறுதலையாகலான். இனிப் பிரியானே யெனில் னும், அன்பிலனாயினானாம்; என்னை? பிரியாதிருப்ப இவ்வொழுக லாறு பிறர்க்குப் புலனாமாக இவள் இறந்துபடும், அவள் இறந்து .
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/191
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை