பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தென்மொழி வரலாறு. யணஞ் செய்யாது மறுக்கின்றார்கள்; அவர்களுடைய அருமை பெருமைகளைச் சிறிதும் சிந்தியாது அவர்களை வேண்டியவாறே நிந்திக்கின்றார்கள். ஐயையோ இது எவ்வளவு அதிபாதகம்! அந பாய சோழமகாராசா பெரிய புராணஞ் செய்தருளிய சேக்கிழார் நாயனாரை யானைமீதேற்றித் தாமே வெண்சாமரம் வீசி நகர்வலஞ் செய்வித்தபொழுது, தில்லை வாழந்தணர்கள் வேத பாராயணஞ் செய்துகொண்டு வந்தார்கள் என்று உமாபதிசிவாசாரியர் சேக்கி ழார் புராணத்தில் கூறியிருக்கின்றாரே. அங் கனமாகவும், அப் பெரிய புராணத்திற் கூறப்பட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களும் டைய உற்சவங்களிலே வேதபாராயணஞ் செய்யலாகாதென்று சிறிதும் பழிபாவங்கட்கு அஞ்சாது பிதற்றுதல் எவ்வளவோரறி யாமை! " மங்கலியத்தைத் தரித்துக்கொண்டு தங்கள் நாயகருக்குத் துரோகஞ்செய்து இல்லொழுக்கிறந்த பெண்டிர்கள் போல, விபூதி ருத்திராட்சங்களைத் தரித்துக் கொண்டு அச் சின்னங்களுக்குரிய சிவபெருமானோடு பசுக்களைச் சமமெனக் கூறியும் சிவ வாக்காகிய சிவாகமங்களை நிந்தித்தும் அச்சிவபெருமானுக்குத் துரோகிகளாய் ஒழுகும் இவர்கள் மற் றை எப்பாதகந்தான் செய்யக் கூசுவர்கள்! ஐயையோ! இச்சிவத்துரோகிகளை நம்முடைய சைவசமயிகள் வணங்குதலும், இவர்களிடத்தே புசித்தலும், இவர்களை விவாகம் சிராத்த முதலிய கருமங்களிலே தான பாத்திரமாகக் கொண்டு, தாம் வருந்தித் தேடிய பொருள்களைப் பாழுக்கிறைத்து எரிவாய் நரகத் துக்கு இரையாதலும் எவ்வ. ளவு அறியாமை! ஓ சைவசமயிகளே சைவசமயிகளே, உங்களெதிரே அறிபத்து மூன்று நாயன்மார்களை நிந்திக்கும் ஸ்மார்த்தர்களைக் காணும் தோறும் இந்த ஐந்து வினாக்களைக் கேட்டு, அவர்களைத் தலைகுனி வித்து அவர்கள் வாயை அடக்குங்கள். அவவினாக்கள் இவை. க, ஒஸ்மார்த்தர்களே, உங்கள் மத தாபகராகிய ஆசாரியர் சங்கராசாரியரோ அன்றோ ? உ. செளந்தரிய லகரியும் சிவானந்தலகரியும் சிவபுசங்கமும் உங்கள் சங்கராசாரியர் செய்த கிரந்தங்களோ அன்றோ ?