தென்மொழி வரலாறு. 179 ந. அறுபத்து மூன்று நாயன்மார்களுள்ளே திருஞான சம் பந்தமூர்த்தி நாயனாரைச் செளந்தரிய லகரியினும், கண்ணப்பநாய னாரைச சிவானந்தலகரியினும், இயற்பகை நாயனாரையும் சிறுத் தொண்ட நாயனாரையும் சண்டேசுர நாயனாரையும் சிவபுசங்கத் தினும் உங்கள சங்கராசாரியர் துதித்திருக்கின்றாரோ அன்றோ ? ச. உங்கள் குருவாகிய சங்கராசாரியராலே துதிக்கப்பட்ட நா யன் மார்களை நீங்கள் நிந்தித்தலினாலே, அச்சங்க ராசாரியரிடத் திலே அறியாமையையேற்றிக் குருந்தகர்களானீர்களோ அன்றோ? ரு அறுபத்து மூன்று நாயன் மார்களை வணங்கும் பிராமணர் கள் பதிதர்களாவார்க ளெனச் சொல்லும் நீங்கள் அவர்களைத் து திக்கும் சங்கராசாரியரைப் பதிதரெனச் சொல்லாது சொல்லி, அவரை நீங்கள் வணங்குதலாற் பதிதரிற் பதிதர்களாயினீர்களோ அன்றோ ? சைவசமயிகளே, நீங்கள் பெறுஞ் சமயதீக்ஷை முதலிய தீ ை## களையும் நீங்கள் அநுட்டிக்கும் சந்தியா வந்தனம் சிவபூசை முதலிய கிரியைகளை யும் உங்களுள் இறந்தவர்கள் பொருட்டுச் செய்யப் படும் அந்தியேட்டி முதலிய கிரியைகளை யும் நீங்கள் சேவிக்குந் தேவாலயங்களிற் கிரியைகளாகிய கர்ஷணாதிப் பிரதிஷ்டாந்தம் பிரதிஷ்டாதி யுற்சவாந்தம்உற்சவாதிப் பிராயச்சித்தாந்தம் என்னும் பரார்த்தக்கிரியைகளை யும் விதித்த நூல்கள் கிவாகமங்களே. அச் சிவாகமங்களினுயர்ச்சியும் அவைகளில் விதிக்கப்பட்ட சிவ தீக்ஷை சைவானுட்டான முதலியவைகளின் உயர்ச்சியும் ஸ்மார்த்தர் களாலே உண்மை நூல்களெனக் கொள்ளப்படும் புராண முதலிய நூல்களிலே பலவிடங்களிலும் எடுத்துச் சொல்லப்பட்டிருக் கின்றன. இவ்வுண்மையை அறியாமையினாலும், அறிந்தவழியும் தங்க ளுக்கு முனிவர் களாலே கிடைத்த சாபத்தினாலும், அச்சிவாகமங் களையும் சைவசமய தாபகர்களாய்ச் சிவமாந் தன்மை பெறும் பேறு பெற்ற உண்மைநாயன்மார்களையும் அவர்கள் உலகமுய்யும் பொருட்டு அருளிச்செய்த தமிழ்வேதமுதலியவற்றையும் நிந்திக்கும் ஸ்மார்த்தர்களை, அச்சிவாகமங்கள் உண்மை நூல்களெனக் கொண்டு
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/195
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை