பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்மொழிவரலாறு

181

சனமூர்த்தி முதலியன நியரித்து அபிடேகம் பண்ணப்பட்டவரே சற்குரு. தேகாதிப் பிரபஞ்சத்தை விடுத்துச் சிவசம்பந்தமுற்றவரே சங்கமம். சிவஞானிகள் பாவனையுற்றதே சிவலிங்கம்.

யாவரும் தமக்கு மேன்மேற் சமயிகளைத் தரிசித்து வணங்கிப் பணி செய்தலும், கீழ்க் கீழ்ச் சமயிகளை நோக்கி இவர்களிவ்வளவில் வந்தார்களே என்று இரங்கி விதித்தன சொல்லி, விலக்கியன ஒழிவித்தலுமே நீதி. இப்படியன்றி ஒருவருக்கொருவர் கலாம் விளைத்தல் நீதிகேடு, தத்துவாதீத சொரூப சிவப்பேறுடையவரை ஈசசதா சிவசாந்த பதப்பேறுடையவர் வணங்கி வழிபடல் வேண்டும். இவ்விருதிறத்தாரையும் கந்தசண்டகணாதீச பதப்பேறுடையவர் வணங்கி வழிபடல் வேண்டும். இம்மூன்று திறத்தாரையும் வசுருத்திராதித்த பதப்பேறுடையவர் வணங்கி வழிபடல் வேண்டும். இந்நான்கு திறத்தாரையும் இவரிற்றாழ்ந்த பிராகிருதர் வணங்கி வழிபடல் வேண்டும். மேலோர்களாயுள்ள ஈச சதாசிவசாந்த பதப் பேறுடையவர்களும், கந்தசண்டகணாதீச பதப்பேறுடையவர்களுமாகிய சைவர்கள், கீழோர்களாகிய வசுருத்திராதித்த பதப்பேறுடையவர்களாகிய ஸ்மார்த்தர்களை வணங்குதலும், அவர்களைச் சிரார்த்த முதலியவற்றில் வரித்துப் பூசித்தலும் நீதியா! இதைச் சிந்தியுங்கள்.

சைவசமயிகளே, நீங்கள் இவ்வுண்மைகளெல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்தறிந்து, சிவபெருமானிடத்தும் உண்மை நாயன்மாரிடத்தும் சிவாகம விதிப்படி பத்தி செய்தொழுகக் கடவீர்கள். இவ்வுண்மை நிலைக்கு மறுதலைப்பட்டவர்களைக் கண்டால், அவர்கள் பொருட்டிரங்கி அவர்களுக்கு நல்லறிவுச்சுடர் கொளுத்தக் கடவீர்கள். அது கூடாதாயின், அவர்கள் செய்யும் சிவாகம நிந்தை, குரு நிந்தை, சங்கம நிந்தை முதலியவற்றைக் கேட்டு எரிவாய் நரகத்துக்கு இரையாகா வண்ணம், அவர்கள் கூட்டத்தை ஒழித்து விடக் கடவீர்கள். இப்படிச் செய்யாது, மதி மயங்கி அவ்வதிபாதகர்களைப் பெரியோர்களெனக் கொண்டு வழிபட்டொழுகுவது பாவம் பாவம்!