பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு சங்கத்தில் அரங்கேற்றல் வேண்டுமென்றும், கல்வியில்வல் லோர் சங்கத்தில் ஆசனம் பெறுவரென்றும், கற்ற பண்டி தர்களுக்கு மந்திரி முதலிய பதங்கள் கொடுக்கப்படுமெ ன்றும், தமிழை வளர்ப்போர்க்கெல்லாம் இறையிலியும் சர்வமானியங்களும் விடப்படுமென்றும், தேசமெங்கும் பறைசாற்றினான். பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை. அதனால் தமிழாராய்ச்சி தேசமெங்கும் விருத்தியா யிற்று. பலவிடங்களிலும் பல்லாயிரம் புலவர் தோன்றிப் பல்லாயிரம் பரிபாடல் பாடிக்கொண்டுபோய் அரங்கேற் றினர். அப்படிப் பாடிய பரிபாடல்கள் எண்ணில்லாதன . முதுநாரை யென்றொரு நூலை யொருவர் செய்து சங்க மெல்லா மெச்ச வரங்கேற்றினர். முதுகுருகென்றொரு நூல் மற்றொருவராற் செய்து அரங்கேற்றப்பட்டது. கள் ரியா விரையெனப் பின்னருமொன் றாரங்கேறிற்று. (இறை யனார்) இப்படி அநேக நூல்கள் அக்காலத்திலே செய்து அரங்கேற்றப்பட்டன. முதுநாரை முதுகுருகென்பன இசைத் தமிழ் நூல்கள். அவை பெருநாரை பெருங்குரு கென வும்படும். (சிலப்) களரியாவிரையை அற நூலென்பர். தலைச்சங்கப்புலவர்கள். தலைச்சங்கத்துப் புலவர்கள் அகத்தியனார், முரிஞ்சி யூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் முதலிய ஐஞ் ஏற்று நாற்பத்தொன்பதின்மர். பாடினோர் சங்கப்புலவருள்பட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர். அச்ச ங்கம் காய்சின வழுதி முதற் கடுங்கோனீறாக ஒருவர் பின் னொருவராய் எண்பத்தொன்பது பாண்டியரால் நடாத்த ப்பட்டுவந்தது. அது நாலாயிரத்து நானூற்று நாற்பது வருடம் நடைபெற்றது. பரிபாடலென்பது பரிபாடலெ ன்னும் பா வகையால் அந் நூலுக்கா கியபெயர். பரிபாடல்