பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தென்மொழி வரலாறு. வும், வெம் என்னும் அடியாக வேந்தன் வேந்து வெம்மை முதலியனவும், வள் என்னும் (கூர்மைப்பொருளில் வரும்) அடியாக வாள் வாளி வாளை முதலியனவும், வள் என் னும் (ஈகைப்பொருளில் வரும்) அடியாக வள்ளல் வள்ளி யோர் வள்ளுவர் வளம் வள்ளன்மை முதலியனவும், விடு என்னும் அடியாக வீடு விடை விடல் விடலை விடுப்பு | விடவு விடர் விட்டில் விட்டேறு முதலியனவும், வெல் | என்னும் அடியாக வேறல் என்பதும், கொல் என்னும் அடியாகக் கோறல் என்பதும், செல் என்னும் அடியாகச் சேறல் என்பதும், சொல் என்னும் அடியாகச் சோறும் என்பதும், இறு என்னும் அடியாக இறுதி ஈறு (வீட் டின்) இறப்பு முதலியன வும், இற என்னும் அடியாக (கட என்னும் பொருளில்) இறை இறையோன் முதலிய னவும், மத் என்னும் அடியாக பூமத்தென்னும் ஓசையை யுடைய மத்தளம் என்பதும், சல் என்னும் அடியாகச் சல் என்னும் ஓசையையுடைய சல்லரி என்பதும், காடி. என்னும் அடியாகக் கரடிபோல உறுமும் ஓசையையும் டைய கரடிகை என்பதும், உண் என்னும் அடியாக உண வு உண் டி ஊண் ஊட்டி முதலியனவும், கண் என் னும் அடியாகக் காண்டல் காட்சி முதலியன வும். இடு என்னும் அடியாக இடு ஈடு இடை முதலியனவும், உறு என்னும் அடியாக ஊ று உறை= (கூடு) முதலியன வும், கட என்னும் அடியாகக் கடவுள் கடை =(முடிவு)கடவை கடப்பு முதலியன வும், கடு என்னும் அடியாகக் காடு கடு த்தல்= (கோபித்தல்) முதலியனவும், எடு என்னும் அடி யாக எடை எடுத்தல் எடுப்பு முதலியனவும், தொடு என் னும் அடியாக தொடை தொடலை தோட்டம் முதலியன வும் பிறக்கும். பூர்வ விவாக வழக்கம். ஒராடவனும் ஒரு பெண்ணும் எதிர்ப்பட்டவிடத்து ஒருவரையொருவர் தாமே காதலித்துக் கூடிக் கூடிய