பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. டல்கள் தோன்றின இச்சங்க காலத்திலே இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் ஆராயப்பட்டன. இலக்கணவிலக்கிய நூல்கள் இயற்றமிழிலும், தோத்தி ரப்பாடலெல்லாம் இசைத் தமிழிலும், கூத்த நூலெல்லாம் நாடகத்தமிழிலும் இயற்றப்பட்டன. அரிமர்த்தன பாண்டியன் காலத்திலே அவனுக்கு மந்தி ரியா யிருந்து பின்னர்ச் சிவயோகியாய் விளங்கிய மாணிக் கவாசக சுவாமிகள் செய்தருளிய திருவாசகமும் திருக் கோவையாரும் வெளிப்பட்டது இச்சங்க காலத்தின் கடைக் கூற்றிலேயாம். திருவாசகம் இசையின் பாலது. மாணிக்கவாசக சுவாமிகள் வடமொழி வேதப் பொருளை யெல்லாம் தமிழ்நாடுய்யும் வண்ணம் தமிழிலே சாமவேத மாக வெளிப்படுத்தியருளினார். இடைச்சங்க காலத்திலே குதிரையைச் சேவல் என் றும் எருமையேற்றைக் கண்டியென்றும் வழங்கினர். அவ்வழக்குப் பிற்றைநாள் வீழ்ந்த து. கடைச்சங்கம். கபாடபுரம் அழிந்தபோது இடைச்சங்கத்திற்கு உரிய புஸ்தகாலயங்களும் கடல் வாய்ப்பட்டு அழிந்தன. அரசனு மிருக்கையிழந்து வடக்கின் கட் சென்றிருந்து இப்போதுள்ள மதுரைநகரை அமைத்து, ஆலவாயிலவிர் சடைக் கடவுளுக்கு மோராலயமெடுப்பித்து, அந்நகரிலே யிருந்தரசியாற்றி வந்தான். தெற்கின் கண்ணேயிருந்தழிந்து போய மதுரையை நோக்கி இம்மதுரை வடமதுரையெ னவும் வழங்கப்படும் முடத்திருமாறன் இம்மதுரையிலே கடைச்சங்கம் ஸ்தாபித்துத் தமிழாராய்வித்து வந்தான். அதனை அவன்