பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தென்மொழி வரலாறு ணினது எலும்பை முன்போலப் பெண்ணாக்கியது முத லிய அனேக அற்புதங்களைச் செய்தவர். கூன்பாண்டிய ன து கொடிய சுரந் தீர்த்து அதுவா யிலாகச் சமணர் தொ டுத்த சமயவா தப்போரில் வென்று சமண சமயத்தை வேர றுத்து அப்பாண்டியனைச் சைவசமயப்பிரவேசஞ் செய் வித்தவர். இவ்வரும் பெருஞ் செயல்களையெல்லாம் பதி னாறாண்டு நிரம்புமுன் செய்து தமிழ்நாட்டுக்கு உலக்குரு வாயின வர். பதினாறாண்டளவில் தந்தையாரது வேண்டு கோளுக்கிணங்கி மணம்புகுந்து, மணக் கோலத்தோடு திருப்பெருமணமென்னுஞ் சிவாலயத்திற் புகுந்து சிவசோ தியிற் கலந் தவர். மணத்திற்காக அங்கே சென்றிருந்தார் யாவரும் அவருடன் சென்று அவர் பெற்ற பெரும்பேறே பெற்றார்கள். சம்பந்தருடைய பாடல்கள் பொருளால் மாத்திர மன்று, சந்தத்தாலும் யாப்பா லும் அற்புதமானவை. தற் காலத்துள்ள யாப்பிலக்கண நூல்களுக்கு அவருடைய பாடல்களுட் சில அதீதமானவையென்பது நுண்மையாய் நோக்குமிடத்துப் புலனாகும். சிற்சில்பாடல்களுக்கு உண் மைப்பொருள் காண்வல்லாரு மிந்நாளில் இலர். . சம்பந்தரைச் சுப்பிரமணியக்கடவுள து அமிசாவதா ரமெனக் கொள் வாருமுளர். அவர் இவ்வுலகில் ஞானவி ளக்கமின்றியிருந்த காலம் மூன்று வருஷம். நான்காம் வயசு முதற் பதினாறாண்டிற் பூரணமாகுங்காறும் ஒப்புயர்வில் லாச் சிவஞானச்செல்வராகவே விளங்கினவர். அற்புதங்க ளினாலே சைவசமய ஸ்தாபனஞ் செய்தருளினமையினால் அவர் சைவசமயாசாரியருளொருவராயினார். இனி அவர் இருந்த காலத்தைப் பலரும் பலவாறாகக் கூறுவர். இன்னகாலமென நிச்சயிப்பது எளிதன்று. ஆயி