பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. 65 வரும், குதிரை வாங்கும்பொருட்டுக் கொண்டு சென்ற திரவியங்களை யெல்லாஞ் சிவாலயத் திருப்பணிக்காக்கிய துணர்ந்து பாண்டியனாலொறுக்கப்பட்டு நின்றபோது சிவபிரான் நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு போய்க் கொ டுத்த வழி அவராற் காத்தருளப்பட்டவரும், பரிகளெல் லாம் நரிகளாக மீளுதலும் பின்னரும் பாண்டியனோ றுக்க, சிவன் வைகையைப் பெருகச்செய்து அதன் கரை யையடைக்கக் கூலியாளாகிச் செல்லப் பெற்றவரும், அதுவாயிலாகப் பாண்டியன் பணியினின்றும் நீங்கிச் சீவன்முத்தராய் விளங்கினவரும், கேட்டோரை மனமும் ருக்கி முத்திநெறியிற் செலுத்துமியல்பின தாகிய திருவா சகமும் திருக்கோவையாரும் பாடியருளியவரும், புத் தரை வாதில் வென்று சைவசமய ஸ்தாபனஞ் செய்தவரு மாகிய சைவசமயாசாரியர். இவர் பூர்வாச்சிரமநாமம் வாதவூரர். இவர்க்குப் பாண்டியனால் சூட்டப்பட்ட பட் டப்பெயர் தென்னவன் பிரமராயன். கல்லாடத்தில் "வெடிவாற் பைங்கட் குறுநரி யினத்தினை யேழிடந் தோன்றி யின னூற் கியைந்து வீதி போகிய வாலுளைப் புரவி யாக்கிய விஞ்சைப் பிறைமுடி யந்தணன்” என்றும், மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக் கூலஞ் சுமக்கக் கொற்றாளாகி நரைத்தலை முதியோ ளிடித்தடு கூலிகொண் உடைப்பது போல வுடைப்பது நோக்கிக் கோமக னடிக்க வவனடி வாங்கி" என்றும் வருதலாலே, கடைச்சங்கப் புலவராகிய கல்லாடருக்கு முன்னுள்ளவரென்பது நிச்சயிக்கப்படும்.