பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாம். யாற் புறத்தே காணப்படும் எச்செயல்களையுஞ் சிவசம்பந் தப்படுத்தியே யெடுத்தோதுவர். திருவண்ணாமலையிலே இவர் தலவாசஞ்செய்தகாலத்திலே அங்குள்ள பெண்கள் வைகறையிலே யெழுந்து சிவதோத்திரஞ் சொல்லிக்கொ ண்டு அயல்வீட்டுப் பெண்களை யெழுப்பி நீராடப் போ தலைக் கண்டு, அச்செயலைச் சிவசத்திகள் சிருஷ்டியின் பொருட்டு ஒருவரையொருவர் எழுப்புவதாகப் பாவித் துத் திருவெம்பாவையைப் பாடியருளினார். இப்படியே புறத்தே நிகழுகின்ற செயல்களாகிய படையெழுச்சி, சாழல், பொற்சுண்ணம் முதலியவைகளை யெல்லாம் சிவ ஞானச் செயலாகப் பாவித்துப் பாடியருளினவர். இவருடைய மனமுஞ் செயலுமெங்கேயழுந்திக்கி டந் தனவென்பது, "எங்கையுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க - கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங்காணற்க - வி ங்கிப்பரிசேயெமக்கெங்கோனல்குதியே - லெங்கெழிலென் ஞாயிறெமக்கு" என்பது முதலிய திருவாக்காலுணரப்ப டும். பேரின்பக்கனியாகிய சிவத்தைக் கிடைத்தற்கரிய பெறும்பேறாக மதித்தார் என்பது, “ஞானக்கரும்பின் றெளியைப்பாகை நாடற்கரியந்லத்தைநந்தாத் தேனைப்பழச்சுவையாயினானைச் சித்தம்புகுந்து தித்திக்கவல்ல கோனைப்பிறப்பறுத்தாண்டு கொண்ட கூத்தனை நாத்தழும்பேறவாழ்த்தி" என்னுந் திவ்வியவாக்காலுணரப்படும். இவருடைய பாடலெல்லாம் ஞானப்பொருள் குறி த்த வுருவகங்களாமென்பதற்கு,