பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. 69 வையகமெல்லா முரலதாக மாமேருவென்னு முலக்கைநாட்டி மெய்யெனுமஞ்சணிறையவட்டி மேதகுதென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச் செம்பொனுலக்கைவலக்கைபற்றி யையனணி தில்லைவாணனுக்கே யாடப்பொற்சுண்ணமிடித்துநாமே என்னுந் திருவாக்குச் சான்றாம். இனி இவருடைய மெய்ஞ்ஞானபோத வாற்றலோ வென்றால் அஃதெடுத்து ரைக்குந் துணைத்தன்று. கல்லை யுங் கனியவைக்குந் திவ்விய வாய்ச்சொல்லென் றுரைத்த லாகாதென்றே மாணிக்கவாசகமென்றிவ்வுலகந் தலைமே லேற்றி யோலமிடுவதாயிற்று. "தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமா ரெமதார் பாசமா ரென்ன மாயமிவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரொடு மவன்றன் கு றிப்பேகுறிக்கொண்டு. போமாறமைமின் பொய்நீக்கிம் புயங்கனாள் வான் பொன்னடிக்கே" இப்பரமோத் தம் வாக்கு வேதோபநிஷதங்களெல்லாம் வற்றையுமொருங்கே யளக்குந் துணை யதாம். இப்படியே ஒவ்வொன்றுமொவ்வொருபநிடதமாமன்றி வாளா இலக் கியமன்று. சிதம்பரத்திலே சிவத்தோடிரண்டறக் கலந்த போது இவர்க்கு வயசு முப்பத்திரண்டு. இனிக் கடைச்சங்கத்து நூல்களைப்பற்றி அறிந்தவு ரையிற் கூறுவாம்.