பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தென்மொழிவரலாறு. தொண்டைமானிளந்திரையனாட்டு நானிலவைந்திணைப் பகுதிகளினீர்மையும், அவன் காஞ்சிநகர் வீற்றிருப்பும், வண்மையுமீக்கூறும். மேலதைச் சிறுபாணாற்றுப்படை யென்று மிதனைப் பெரும்பாணாற்றுப்படையென்றும் வழங்கினார், அடிகளின் சிறுமை பெருமைநோக்கியே ன்க. இது பரிசில் வேண்டிய பாண்மகனொருவனைப் பரி சில் பெற்றானொருவன் அது வழங்குதற்குரியனின்ன னென்று ஆற்றுப்படுத்தலின் மக்கட் பகுதியான பாடாண்பாட்டென்றறிக. முல்லைப்பாட்டு - இது காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது. தலைமகள் பகைமேற்சென்ற தலைவன் வருங்காறுங் கற்பாற்றியி ருந்தாட்குத் தலைமகன் வந்தது கண்ட தோழி முதலிய வாயில்கடம்முட் கூறுதலைப் பொருளாக வுடையது. இது தலைவி தனித்திருக்கும் பெற்றியுங் கார்ப்பெற்றி யும் பகைவர் துயர்ப்பெற்றியும் தலைமகன் விறலுக் கூறும். "செலவிடையழுங்கல்செல்லாமையன்றே வன் புறை குறித்த விர்ச்சியாகும் என்ற தொல்காப்பியர் கருத்திற்கேற்ப நப்பூதனாரிச் செய்யுள் செய்தாரென்றுணர்க. இது அன்புறு கற்பா ட்டியான தலைவியை வன்புறை குறித்துப் பிரிதலொ முழுக்கங் கூறுதலின், கற்பென்னுங் கைகோண் மேல தாய் முல்லைபற்றியெழுந்த பாலைப்பாட்டென்றுணர்க. மது ரைக்காஞ்சி - இது மாங்குடி மருதனார் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியனெடுஞ்செழியனைப் பாடியது ; வீடுபேறு குறித்து நிலையாமை செவியறிவு . றுத்தலைப் பொருளாகவுடையது. இது பாண்டியன்