தென்மொழி வரலாறு. 83 த் துளப்பட நூற்றிரண்டகவற்பாக்களுடையது. அகப் பொருட்பகுதிகளை மிகத்தெளித்துரைப்பது "கல்லாடர் செய்பனுவற் கல்லாடநுாறு நூல், வல்லார் சங்கத்தில் வதிந் தருளிச் - சொல்லாயு, மாமதுரை யீசர் மனமுவந்து கேட்டு முடி , தா மசைத் தார் நூறு தரம்.. என்னும் முன்னோர் செய்யுள் இதன் பெருமைக்கு சான்றாகும். இந் நூற்கு மயிலேறும் பெருமாள் பிள்ளை யெழுதியவரை முப்பத் தேழு அகவன் மாத்திரையின் விளக்கமுறுகின்றது. இன் னும் பெருந்தேவனார் பாரதந் தகடூர் யாத்திரை முதற் கடைச்சங்க விலக்கியம் பிறவு முள. (தி- பி - கை ) திவாகரம். இது திவாகர முனிவர் செய்த நிகண்டு இஃது அம் பர் நகரத்துச் சேந்தன் செய்வித்தமையினால் சேந்தன் திவாகரமெனப் பெயர்பெறும். பன்னிரண்டு தொகுதி களையுடையது. இந்நூல் சிற்றள வினவாகிய சூத்திரங்க ளால் யாக்கப்பட்டிருத்தலிற் கற்போர்க்குப் பெரிதும் பயன் படத்தக்கது. "கற்ற நா வினன் கேட்ட செவி யினன், முற்ற வுணர்ந்த மூதறி வாளன், நாகரிக நாட்டத் தயரிய னருவந்தை, த ருங்காட்சிச் சேந்தன் எனத் திவாகரத் துள்ளே வருங்கூற்றாற் சேந்தன் செய்வித்தோ னென்ப தும், "செங்கதிர் வரத்திற் றோன்றுந் திவாகரர் " எனவ ரும் வீரைமண்டலவன் நிகண்டுப்பாயிரத்தாலே திவாகரர் சூரிய குல வேந்தர் பரம்பரையில் வந்தோரென்பதும் நன் றாக நிச்சயிக்கப்படும். சேந்தன் கல்லாடராற் புறநானூற் றினுள்ளே பாடப்படுதலின் திவாகரர் கடைச்சங்க காலத் தவரென்பது நன்கு துணியப்படும். பிங்கல முனிவர். இவர் திவாகர நிகண்டு செய்த திவாகரர் புத்திரனார். இவர் சோழவமிசத்திலுதித்தவரேயாயினும் துறவு பூண்டு
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/99
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை