பக்கம்:தெப்போ-76.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 125 புகழ்பெற்ற மிக்கிமாட்டோஅலுவலக வாசலில் முத்துப் பல்லக்கு ஜோடனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேருக்கு முன்னுல் பவனி வரப்போகும் அந்தப் பல்லக் கைச் சுற்றிப் பெரும் கூட்டம் சூழ்ந்திருந்தது. பஞ்கவும் கோபால் ராவும் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தார்கள். போவம் பஞ்சு! இன்றெல்லாம் சாப்பிடவில்லை. க்ளின் ஃபாஸ்ட் என் ருர் அம்மாஞ்சி. அப்படீன்ன??? என்று கேட்டார் சாம்பசிவம். 'சுத்தப் பட்டினி என்று அர்த்தம்’ என்ருர் அம்மாஞ்சி.

  • எப்பவுமே பஞ்சு ஸார் ரொம்ப க்ளின். அத்தோடு இப்ப வேகமும் சேர்ந்து விட்டது, அதனுலே சுத்தமாகவும் வேகமாகவும் இருக்கிருர் என்பதைத்தான் க்ளின் ஃபாஸ்ட் என்று சொன் னிர்களோ என எண்ணிக் கொண்டேன்’ என்ருர் சாம்பசிவம்,

தேருக்குப் பக்கத்திலேயே மேடை அமைத்து ஷாமி யானு போடுவதில் முனேந்திருந்தார் கோபால் ராவ். சக்கர வர்த்தி குடும்பத்தினர், ஜப்பான் தேசத்துப் பிரதமர், குறளோவியம் ஆசிரியர் கலேஞர், மற்ற முக்கிய விருந் தினர்கள் எல்லோருடைய பெயர்களேயும் எழுதி, யார் யார் எங்கெங்கே உட்காருவது என்பதைத் தீர்மானித்து, அவ் வளவு பேருக்கும் நாற்காலிகள் போட்டு அவரவர்களுக் குரிய ஆசனத்தில் அவரவர் பெயர்களேயும் ஒட்டி விட்டார் கோபால் ராவ். - . பூமாலேகளே யார் எடுத்துக் கொடுக்க வேண்டும், யார் யாருக்கு யார் யார் மாலே போட வேண்டும் என்பது போன்ற நுணுக்கமான விவரங்களேக்கூட யோசித்து வைத் திருந்தார் அவர், வி. ஐ. பி.க்களும் விசேஷ விருந்தினர்களும் உட்காரு வதற்கு ஷாமியானவுக்குப் பக்கத்திலேயே இடம் போடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/126&oldid=924628" இலிருந்து மீள்விக்கப்பட்டது