பக்கம்:தெப்போ-76.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - கின்லாவிலுள்ள மிக்கிமாட்டோ, மட்ஸ் ஜகாயா, மிட்ஸ்-கோஷி போன்ற பெரிய பெரிய கட்டடங்கள் அவ்வளவையும் வெளிநாட்டு வி. ஐ. பி. க்கள் உட்கார்ந்து பார்ப்பதற்காக ரிஸர்வ்’ செய்திருந்தார்கள். கிமோனுக்கள் அணிந்த ஜப்பானியப்-பெண்கள் சாரி சரியாக கினன்ங்க் வருவது, கமகட், கலச் மிட்டாய், கொட்டாங்கச்சி வாத்திய விற்பனே, அதிர் வேட்டுப் புகை, யானைகள் தேரை முட்டித் தள்ளுவது, ஜப்பான் சிறுவர்கள் கையில் மிட்டாய் ரிஸ்ட்வாட்ச் கட்டிக் கொள்வது போன்ற வேடிக்கைகளை டெலிவிஷனில் பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தனர், கின்ஸாவுக்கு வர முடியாத ஜப்பானிய மக்கள். - - சாம்பசிவ சாஸ்திரி, ஜப்பான். சாஸ்திரி, அம்மாஞ்சி வர்த்தியார், கோபால் ராவ் ஆகிய நால்வரும் தேர் மீது ஏறித் திசைக்கு ஒருவராக நின்று கொண்டனர். தேருக்குக் கீழே நட்ந்து கொண்டிருந்த திரு வி. எஸ். டி. தேரோட்டம் தடங்கலின்றி ஒழுங்காக நடைபெறுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அவ்வப்போது அவர் கைகளே உயர்த்தி வடம் இழுப்பவர்களே ஊக்கி உற்சாகப் படுத்துவதும், தேர் நகராத நேரங்களில் தமது இரு கை களையும் கோத்துத் தலைக்கு மேல் தாங்கி நிற்பதும் அவரு டைய வழக்கம் என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரிந்த விஷயம்! தெ-9 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/137&oldid=924640" இலிருந்து மீள்விக்கப்பட்டது