பக்கம்:தெப்போ-76.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தெப்போ - 76 அவ்வளவுதான்; தெப்ப விழா முடிந்ததோ இல்லையோ, அடுத்த நிமிடமே எல்லோரும் டோக்கியோ கிளம்பி விட்டனர். டோக்கியோ போய்ச் சேர்ந்ததும் சாஸ்திரிகள் மூவ ரும் நேரத்தை வீணுக்காமல் வெளியே புறப்பட்டு விட்டார் கள். காலேயில் போனவர்கள் பகல் ஒரு மணிவரை திரும்பி வரவில்லே.

  • சாப்பிடாமல் கூட எங்கே போய் விட்டார்கள் இந்த சாஸ்திரிகள்?' என்று கேட்டார் மகாராணி.

தி க்ரேட் எர்த் க்வேக்-ஃபயர் மெமோரியல் ஹாலுக் குப் போயிருக்கிருர்கள்?’ என் ருர் கோபால் ராவ்.

  • நாளேக்கு எல்லோரும் ஊருக்குப் போகப் போகிறீர் களே, இன்று அரண்மனையில் நாம் எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாமே என்று நினேத்தேன். சாப்பாட்டு நேரத் துக்குள் வந்து விடுவார்களா??’ என்று கேட்டார் சக்கர வர்த் தி.

வரமாட்டார்கள்; நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னல் இந்த கண்ட்டோ ஏரியாவில் பூகம்பமும் தீ விபத் தும் ஏற்பட்டு ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இறந்துவிட்டார் களாம். அவர்கள் ஞாபகார்த்தமாக இந்த நகரத்தில் கட்டி யுள்ள நினைவு மண்டபத்தைப் பார்க்கப் போயிருக்கிருர் கள். இன்று எதுவும் சாப்பிட மாட்டார்களாம். வெறும் சாதத்தை மட்டும் உருட்டி விழுங்குவார்களாம். காரணம், விபத்து நடைபெற்ற போது ஜப்பானிய மக்களுக்கு அரிசிச் சோறு தவிர வேறு எந்த உணவும் கிடைக்கவில்லேயாம்' என்ருன் பஞ்சு, 'அப்படியா? உங்கள் சாஸ்திரிகளின் மனிதாபிமான உணர்வு என்னே மெய்சிலிர்க்க வைக்கிறது?’ என்ருர் சக்கரவர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/156&oldid=924661" இலிருந்து மீள்விக்கப்பட்டது