பக்கம்:தெப்போ-76.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 நாம் முன்னுடியே ஜப்பானுக்குப் போய் பூர் வாங்க ஏற்பாடுகளே யெல்லாம் கவனிக்கணுமாம். பஞ்சு எழுதியிருக்கான், அவன் இப்போ டில்லி ஜாப்னி ஸ் எம்ப" ளியிலே ஒரு முக்கியமான ஆபீசர், தெரியுமோல்லியோ??? * யார், நம்ப பஞ்சு ஸாரா? முன்னே அமெரிக்காவுக்கு அழைச் சிண்டு போனர். இப்போ ஜப்பானுக்கா? பலே, பலே! அது சரி, ஜப்பான்லே நாம் எங்கே தங்கப் போகி ருேம்? சாப்பாட்டு அரேஞ்ச்மெண்டெல்லாம் எப்படி??? என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள் .

  • இம்பீரியல் பாலஸ்லே ஜப்பான் சக்கரவர்த்தியின் *கஸ்ட்டா தங்கப் போகிருேம் என்ருர் அம்மாஞ்சி.

'இத பாருங்க, நாம் ஜப்பான் போகப் போகிற விஷ யம் யாருக்கும் தெரிய வேண்டாம். தெரிஞ்சா ஒவ்வொருத் தரும் வாட்ச், காமிரா, டேப் ரிகார்டர்னு பிரான இன எடுத் துடுவாங்க...?’ என் ருர் சாம்பசிவ சாஸ்திரிகள். 'ரொம்ப சரி; ஆணுல் நம்ம ஜப்பான் சாஸ்திரிகளே மட்டும் அழைச்சுண்டு போயிடலாம். பார்க்கறதுக்குக் குள்ளமா ஜப்பான்காரன் மாதிரி இருக்கார். அத்தோடு நல்ல சுறுசுறுப்பு. பேரும் ஜப்பான் சாஸ்திரி. அவரை நினைச் சாலே எனக்குச் சிரிப்பு வரது...?? என்ருர் அம். மாஞ்சி, ஏன்?: 'ஒரு நாள் வெற்றிலேக்குக் கீழ்ப் பாதியிலே மட்டும் சுண்ணும்பைத் தடவிக் கொண்டிருந்தார். என்ன சாஸ் திரிகளே, மேல் பாதிக்கு சுண்ணும்பு தடவலேயா?’ என்று. கேட்டேன். நான் குள்ளமோன்னே, மேல் பாதி எட்ட வில்லே’ என்று ஜோக் அடிக்கிருர் அவர் கூட இருந்தால் பொழுது போவதே தெரியாது. ரொம்ப தமாஷ் பேர்வழி?’ என்ருர் அம்மாஞ்சி. 'அவர் அசல் பேரென்ன?’ என்று கேட்டார் சாம்ப சிவ சாஸ்திரிகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/19&oldid=924670" இலிருந்து மீள்விக்கப்பட்டது