பக்கம்:தெப்போ-76.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:20 தெப்போ-76 'விசிறியிலிருந்தா காத்து வருகிறது? ஊரிலே காத்து இல்லேன்ன விசிறி என்ன பண்ணும்??? என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள். - 'என்ன இருந்தாலும் ஜப்பான் சாமான் ஆகாதய்யா, ஜப்பான் மாதிரி ஒரு அழகான நாடும் கிடையாது. ஜப்பான் தேசத்திலே கெய்ஷா கர்ல்ஸ் விசிறி வெச்சிண்டு: நடக்கிறதே ஒரு தனி அழகாம். என் மருமான் சொல்லு வான்’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'கெய்ஷான்னுலே கர்ல் என்றுதான்யா அர்த்தம். அதனுலே கெய்ஷான்னு மட்டும் சொன்னல் போதும். ஆம்பளே கெய்ஷா கிடையாது?’ என்று திருத்தினர் சாம்ப சிவம். - 'ஜப்பானுக்குப் போனல் ஒரு கெய்ஷா அழகியைப் பார்த்துவிட்டு வரணும்?’ என்ருர் அம்மாஞ்சி வாத்தியார். 'உமக்கு அப்படி ஒரு சபலமா! அது சரி, உமக்கு ஜப்பான் பாஷை தெரியுமா??? - 'பாஷை என்ன பிரமாதம்? நாம் சிரிச்சா அவளும் சரிக்கிரு. க்யூஷூ, ஷிகோகு, ஹோன்ஷூ, ஹொக் காய்டு - இவ்வளவு தானே ஜப்பான்? என்ருர் குள்ள சாஸ்திரி. - ஒய், ஒய் உமக்கு ஜப்பான். பாஷை தெரியுமா?? என்று வியந்தார் அம்மாஞ்சி. - 'இது பாஷை இல்லை. முக்கியமான நாலு ஜப்பான்' .தீவுகளின் பெயர். ஹோன்ஷா தீவிலேதான் டோக் கியோ இருக்கு. டோக்கியோவிலேதான் இண்டியன் -எம்பஸி இருக்கு. அங்கேதான் என் மருமான் இருக்கான்’’ -என்ருர் ஜப்பான் சாஸ்திரி. . . . சாம்பசிவ சாஸ்திரி தலையை நிமிர்த்தி யோசனையில் ஆழ்ந்தார். - - 'என்ன பலமா யோசிக்கிறீங்க??? என்று சாம்பசிவ். சாஸ்திரியைப் பார்த்துக் கேட்டார் அம்மாஞ்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/21&oldid=924672" இலிருந்து மீள்விக்கப்பட்டது