பக்கம்:தெப்போ-76.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 28 பெரிய பெரிய கண்ணுடிக் கதவுகள் டக்கென்று: திறந்து கொள்வதும் மூடிக் கொள்வதுமாக இருந்தன. அவை எப்போது திறக்கும், எப்போது மூடிக்கொள்ளும் என்பது அம்மாஞ்சி வாத்தியாருக்குப் புரியவில்லே. அது எலெக்ட்ரானிக் ஸிஸ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்ததால் ஆள் அருகில் போனதும், திறந்து கொள்ளும் என்ற ரகசி யம் அவருக்குத் தெரியாது. அது திறக்கும் போது உஷா ராக இருந்து பாய்ந்து வெளியே போக வேண்டும். அது தன்னல் முடியாத காரியம் என்று எண்ணிக் கொண்டார். வெளியே செல்ல வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று அவர் திரு திருவென்று விழித்துக் கொண்டிருந்தபோது அங்கே வந்த பஞ்சு, ஒய் அம்மாஞ்சி, எல்லாருக்கும் முன்ல்ை இங்கே வந்து என்ன செய்கிறீர்? வாரும், போக லாம்?’ என்று அழைத்துக் கொண்டே வேகமாக நடந் தான். அவன் அந்தக் கதவருகில் போகும்போதே கதவு சட்டென்று திறந்து கொண்டுவிட்டது. அம்மாஞ்சி வாத்தி யாருக்கு வியப்புத் தாங்கவில்லே. பஞ் சுவைக் கண்டால் ஜப்பான் கதவுகள் பயந்து வழி விடுகின்றன. ஜப்பானில் பஞ்சுவுக்கு நல்ல செல்வாக்கு’ என்று எண்ணிக் கொண் ·每一择JT。 அரண்மனேயிலிருந்து வந்திருந்த காரில் ஐவரும் ஏறிக் கொண்டனர். அது வாயு வேகத்தில் பறந்தது. * அப்பா, என்ன ஸ்பீட்?" என்ருர் அம்மாஞ்சி. இங்கிருந்து டோக்கியோ நகரத்துக்கு மாளுே ரயில் போகிறது. ஒற்றைத் தண்டவானம். அந்த ரயிலின் வேகத்தைப் பார்க்கணும் நீங்க! ?’ என்ருர் கோபால் ராவ். ஏர்போர்ட்டிலிருந்து இம்பீரியல் பாலெஸ் போய்ச் சேருவதற்குள் பல பாலங்கள் குறுக்கிட்டன. அங்கங்கே * ஃப்ளே ஒவர்'கள் பல்வேறு திசைகளில் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தன. அம்மாஞ்சி வாத்தியார் எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/24&oldid=924675" இலிருந்து மீள்விக்கப்பட்டது