பக்கம்:தெப்போ-76.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 29

  • ஒய், சாம்பசிவ சாஸ்திரி! உமக்கு இங்கிலிஷே தெரியாது. கண்டபடி உளருதேயும். த்ரெட் பேர்ன நம்ம மூணு பேரையும் பற்றிப் பேசுவாங்க. நாம்தானே பேர். பாடியா இருக்கோம். அந்த பாடியிலே ஒரு த்ரெட் போட் டுக் கொண்டிருக்கோம். அதுக்குத்தான் த்ரெட்பேர்னு. சொல்லுவாங்க’’ என்று தமது பூணுாலேக் காட்டி விளக் கினர் அம்மாஞ்சி.

'நாம் மூவரும் டோக்கியோ டவருக்குப் போகனுமே. அதுக்கு என்ன அரேஞ்ச்மெண்ட்??? என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. 'வாசலில் கார் ரெடியா நிற்கிறது. நாம் அதில் ஏறிக் கொண்டு இஷ்டப்பட்ட இடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டியதுதான்’ என்ருர் சாம்பசிவம். : 'நமக்கு மொழியும் தெரியாது. வழியும் தெரியாதே!?? என்ருர் அம்மாஞ்சி, -டிரைவர் விட்ட வழி: என்ருர் சாம்பசிவம். * சரி, முதல்லே டிரைவரிடம் டோக்கியோ டவருக்குப் போகச் சொல்லணுமே, அதற்கு என்ன வழி?’ என்ருர் அம்மாஞ்சி. 'நான் சொல்றேன். எனக்கு ஜப்பான் பாஷை தெரி பும்?’ என்று முந்திக் கொண்டார் ஜப்பான் சாஸ்திரி. ஜப்பான் சாஸ்திரி வந்தது செளகரியமாப் போச்சு! அவருக்கு இங்கிலீஷசம் சுமாராத் தெரியும்?’ என்ருர், சாம்பசிவம். - மூவரும் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். 'டோக்கியோ டவர், ஸ்குயுகிமாஷோ?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி. அவர் அப்படிச் சொன்னதுதான் தாமதம். டிரைவர் வாயு வேகத்தில் டோக்கியோ டவரை நோக்கிப் பறந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/30&oldid=924682" இலிருந்து மீள்விக்கப்பட்டது