பக்கம்:தெப்போ-76.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76. 超置? பல்மைரா வீஃப் என்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'பல்மைரா ட்ரீ எப்படி இருக்கும்?' என்று கேட்டார். அமெரிக்கர். - 'நெட்டையா உயரமா இருக்கும். முப்பது நாற்பது அடி உயரம் இருக்கும்?’ என்ருர் சாம்பசிவம். அவ்வளவு உயரத்திலுள்ள இந்த லீஃப் களை எப்படி எடுப்பீர்கள்??? 'எங்கள் ஊரில் ஒவ்வொரு பல்மைரா ட்ரீக்கும் ஒரு லிஃப்ட் வைத்திருக்கிருேம். அதில் ஏறிப் போய்ப் பறித்து வந்து விடுவோம்’ என்று ஒரு போடு போட்டார் சாம்பசிவம். - இண்டியா மஸ்ட் பி எ வெரி ரிச் கண்ட்ரி. எவெரி பல்மைரா ட்ரீ ஹேஸ் எ லிஃப்ட் 1’ என்ருர் அமெரிக்கர். 'நான் கீழேயே நிற்கிறேன். நீங்க ரெண்டு பேரும் லிஃப்ட்லே மேலே போய்ப் பார்த்துவிட்டு வாங்க என்ருர் சாம்பசிவம். 'நீங்க இல்லாமல் எப்படி ஏரியல் சர்வே நடத்துவது? நீங்களும் வாங்க ? என்ருர் அம்மாஞ்சி. 'எனக்குப் பயமாயிருக்கு. இந்த ஊரிலே அடிக்கடி பூகம்பம் வருமாமே!’’ என்று நடுங்கினர் சாம்பசிவம். 'ஏன் இப்படி நடுங்கறீங்க??? என்று கேட்டார்

அம்மாஞ்சி. - அது சாதா நடுக்கமில்லே; நில நடுக்கம் என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - அம்மாஞ்சியும் குள்ள சாஸ்திரியும், அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள். மூவரும் மேலே போனதும் முப்பது யென் கொடுத்து ஆளுக்கொரு பைனுகுலரை வாடகைக்கு வாங்கிக் கொண் யார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/32&oldid=924684" இலிருந்து மீள்விக்கப்பட்டது