பக்கம்:தெப்போ-76.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 35: ஃபஸ்ட்க்ளாஸ் ஐடியா! நான் ரெடி! புடலங்காய். பொரிச்சக் கூட்டு, உருளேக் கிழங்கு பொடிமாஸ், முருங். கைக்காய் சாம்பார், பச்சைப் பட்டாணி, கோஸ், பீன்ஸ் மூணும் போட்டு ஒரு கறி, ஒரு பச்சடி, ஒரு அப்பளம்!” எப்படி?’ என்ருர் அம்மாஞ்சி. - 'அடிச்சு நொறுக்கிடலாம். என்ருர் சாம்பசிவம். 'அடாடா! நாக்கிலே ஜலம் சொட்றது?’ என்றர் ஜப்பான் சாஸ்திரி, 'பச்சைப் பட்டாணி, கோஸ், பீன்ஸ் இந்த மூனும் நல்ல காம்பினேஷன்?’ என்ருர் சாம்பசிவம். பீன்ஸ் கறியில் பச்சை மிளகாயை வெட்டிப் போட்டு: விடாதீங்க. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பச்சை மிளகாயைக் கடித்து விடுவோம். அப்புறம் நாக்கிலே மட்டும் ஜலம் சொட்டாது. கண்ணிலிருந்தும் கொட்டும்’’ என்ருர் சாம்பசிவம். - 'பச்சை மிளகாய், எலுமிச்சம் பழம், இஞ்சி, கொத்து: மல்லி, கறிவேப்பிலே இந்த அஞ்சும் இருந்துட்டா சமையல் ருசியே தனி. அஞ்சும் பஞ்சரத்னம் மாதிரி’’ என்ருர் அம்மாஞ்சி. 'ஜப்பான் ரோடுகளைப் பார்த்தீங்களா, எவ்வளவு: க்ளின. இருக்குது! ஒரு தும்பு தூசு இல்லேயே!’’ என்ருர் சாம்பசிவம், c 'ரோடா அது? மொலைக் தரை மாதிரின்கு இருக்கு. ரோடிலேயே இலே போட்டுச் சாப்பிடலாம். அத்தனை சுத்தமாயிருக்கு.” இங்கே தேர் விட வந்தீங்களா? பந்தி போட்டுச் சாப்பிட வந்தீங்களா?...?? என்று கடிந்து கொண்டார். சாம்பசிவம். ஊரை விட்டு வந்து முழுசா மூணு நாள் கூட ஆகவில்லே. இதற்குள் நாக்கு செத்துப் போச்சு’’ என்ருர்அம்மாஞ்சி. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/36&oldid=924688" இலிருந்து மீள்விக்கப்பட்டது