பக்கம்:தெப்போ-76.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தெப்போ - 76. எனக்கு மூக்கு செத்துப் போச்சு. கொண்டு வந்த பொடி ஸ்டாக் தீர்ந்து போச்சு’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - உமக்கு முக்கே இல்லே ஜப்பான்காரன் மாதிரி. இந்த லட்சணத்திலே பொடி வேறேயா!' என்று சுேலி செய் தார் அம்மாஞ்சி, - - ஒய் அம்மாஞ்சி! உம்ம வாச்சிலே இப்ப என்ன டைம்??? என்று கேட்டார் சாம்பசிவம். லெவனே கால்1 என்ருர் அம்மாஞ்சி. மணி ஆறரை கூட இருக்காது. லெவனே காலாம். உம்ம வாச் ரொம்ப ஃபாஸ்ட்டா ஒடறது?’ என்ருர் சாம்பசிவம். ஜப்பானுேல்லியோ! இங்கே எல்லாமே ஃபாஸ்ட் டாத்தான் ஒடும்?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. இதற்குள் மாலே மயங்கி இருள் சூழத் தொடங்கியது. அதே சமயம் ஒரு மாயா ஜாலம் நிகழ்வது போல் டோக் கியோ நகர் முழுதும் ஒளி பெற்று வைர வைடுரியங்களாக %ாறி மின்னத் தொடங்கின. நியான் விளக்குகளும், பேப்பர் விளக்குகளும், பூச்சி எழுத்துக்களும் சேர்ந்து வண் -ணக் கோலங்களாய் நெளிந்து வளேந்து கொண்டிருந்தன. சற்றுமுன் பகல் வெளிச்சத்தில் பார்த்த டோக்கி யோவுக்கும் இப்போது இரவில் பார்க்கும் டோக்கியோவுக் .கும் எவ்வளவு வித்தியாசம்!” என்ருர் அம்மாஞ்சி. கிேன் ஸ்ா விதியில் தேர் நகரும் போது கண் கொள் சூளாக் காட்சியாயிருக்கும்.’’ என்ருர் சாம்பசிவம்,

  • வள்ளுவருக்கு நுங்கம்பாக்கத்திலே தேர் எழுப்பி ளுேம், இங்கே கின்ஸ்ாவிலே தேரிலேயே அவரை வைத்து இழுக்கப் போகிருேம்’’ என்று பெருமை பொங்கக் கூறினர் அம்மாஞ்சி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/37&oldid=924689" இலிருந்து மீள்விக்கப்பட்டது