பக்கம்:தெப்போ-76.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தெப்போ - 76 'பறக்கும்னு சொல்லுங்க! என்ருர் அம்மாஞ்சி. * புல்லெட் ட்ரெயின் என்றுகூட அதற்கு ஒரு பெயர் உண்டு என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - முதல்லே டோக்கியோ ஸ்டேஷனுக்குப் போய் எலஅப்பர் எக்ஸ்பிரஸ் புறப்படற பிளாட்பாரத்தைக் கண்டு பிடிக்கனுமே. அதைச் சொல்லுங்க’’ என்று கவலைப்பட் டார் அம்மாஞ்சி. ஒரு கவலையுமில்லே. ஜப்பான் கய்டு அழகிகள் ஸ்டேஷன்லே மூலே க்கு மூலே நிற்பார்களாம். அவர்களுக்கு இங்கிலீஷ் நன் ருகப் பேசத் தெரியுமாம்!’’ என்ருர் ஜப் பான் சாஸ்திரி. நமக்குப் பேசத் தெரியாதே! என்ருர் அம்மாஞ்சி. * சரி, காலேயில் முதல் காரியமா பஞ்சு ஸாரைப் பார்த்து நம்ம ப்ரோக்ராமைச் சொல்லிவிடலாம்' என்ருர் அம்மாஞ்சி. ஆமாம்; அவருக்கும் நிறைய வேலை இருக்கும். தேர் நிலேக்கு வருகிற வரைக்கும் அவர் ஒரு நிலையில் நிற்க மாட்டார். பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டே இருப்பார்: என்ருர் சாம்பசிவம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/49&oldid=924702" இலிருந்து மீள்விக்கப்பட்டது