பக்கம்:தெப்போ-76.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ-76 - 53.

பருப்பில்லாமல் கல்யாணமா? தெப்போ 76 இகுை . ரேஷனே அவர் கையாலேதான். யூ மஸ்ட் கிவ் தி: டெவில் இட்ஸ் ட்யூ’’ என்ருன் பஞ்சு,

பேஸ்ட்கிளாஸ் ஐடியா!' என்ருர் அம்மாஞ்சி.

இந்த மாதிரி ஐடியாவெல்லாம் பஞ்சு ஸாருக்குத். தான் உதிக்கும்! என்ருர் சாம்பசிவம்.

'அது சரி; சக்கரவர்த்தி இன்று பதிளுெரு மணிக்கு உங்களுக்கு பேட்டி கொடுக்கப் போகிறர். நீங்க மூணு பேரும் அதற்குள் பாலஸ் ஆபீஸில் ரெடியா இருக்கணும். தேரோட்டம் என்றைக்கு என்று தேதி நிச்சயம் செய்ய ணும். சக்ரவர்த்தி பெயரில் இன்விடேஷன்” போடணும். அவரிடமே உங்க ஐடியாவெல்லாம் சொல்லுங்க...?? என் ருன் பஞ்சு.

  • நான் சக்கரவர்த்தியை ஏற்கெனவே பார்த்தாச்சு!? என்று சொல்லிக்கொண்டே வந்தார் கோபால் ராவ், பெருமை பொங்க. -

என்னது 1 சக்கரவர்த்தியைப் பார்த்துவிட்டீரா? எப்போது பார்த்தீர்?’ என்று கேட்டான் பஞ்சு. - காலே வேளையில் சக்கரவர்த்தி தோட்டத்தில் உலா வச் செல்வது வழக்கமாம். அரண்மனை சிப்பந்தி ஒருவர் சொன் ஞர். சக்கரவர்த்தி எந்தப் பக்கம் உலாத்துவார். என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தப் பக்கமாக நடந்: தேன். ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த செடி கொடி களேயும் கையோடு எடுத்துச் சென்றேன். சக்கரவர்த்தி என்னேப் பார்த்துவிட்டு அருகில் அழைத்து இந்தோஜின்? இந்தியன?’ என்று கேட்டார். 'நான் தேர் விடுகிற பார்ட்டி, யைச் சேர்ந்தவன்? என்று சொன்னேன், ரொம்ப சந்தோ ஷப்பட்டார். நான் அவருக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொண்டு வந்த செடிகளைக் கொடுத்து வாழ்த்துத் தெரி: வித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/54&oldid=924708" இலிருந்து மீள்விக்கப்பட்டது