பக்கம்:தெப்போ-76.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 - தெப்போ - 76 நமக்கு உளுந்து வடை அலுத்துப் போச்சா?’’ -என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. அம்மாஞ்சி மான்களேத் தடவிக் கொடுத்தார். இந்த மான்கள் பயப்படவே இல்லேயே. நம் ஊர் ஜூவில் ஆளைக் கண்டால் பயந்து ஒடுமே” என்ருர் சாம்பசிவம். அம்மாஞ்சி வாத்தியாரையும் மானையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டான் ரமேஷ். 'அம்மாஞ்சியும் மானும் சேர்ந்து எடுத்துக் கொண்ட :படத்துக்கு மானும் கரடியும்’ என்று தலேப்புக் கொடுக்க -லாம்?’ என்று கேலி செய்தார் சாம்பசிவம், - 'நல்ல மான்தோல் கிடைத்தால் கீழே ஆசனமாகப் போட்டுக்கொண்டு ஜபம் செய்ய உதவும். என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - மோனே யாரும் தொடக்கூடாது. இங்கே மானைத் தொட்டால் நம்ம தோலே உரித்து விடுவார்கள்?’ என்ருன் .ரமேஷ், - , “. 'மான், யானை இதெல்லாம் செத்தாலும் பயன்படுகின் றன. மனுஷன் செத்தால் எதற்கும் உபயோகமில்லை’’ -என்ருர் சாம்பசிவம். - -

  • மெடிகல் காலேஜில் எலும்புக் கூட்டை வைத்துப் பாடம் சொல்லித் தர உபயோகப்படுமே என்ருர் ஜப்பான்

சாஸ்திரி. - - - அடுத்தாற்போல், புத்தர் கோயிலுக்குப் போய்ப் பார்த்தார்கள். பெரிய பெரிய வைரம் பாய்ந்த மரங்களைக் கொண்டு விதானங்களும் கூரைகளும் அமைத்துக் கட்டப் :பட்டிருந்தது அந்தக் கோயில். சாம்பசிவம் அவற்றை அண்ணுந்து பார்த்தபடி "ஆகா! ஜப்பான்காரன் மூளையே மூளே !?’ என்று வியந்து கொண்டிருந்தார். : வாரும், வாரும், நேரமாகிறது; அப்படியே ஆகா .சத்தைப் பார்த்துக்கொண்டே திடீரென்று காணுமல் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/69&oldid=924724" இலிருந்து மீள்விக்கப்பட்டது