பக்கம்:தெப்போ-76.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 77 'அழகான சூரியோதயக் காட்சியைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லே?’ என்று வருத்தப்பட்டார் அம்மாஞ்சி. 'உதயசூரியனுக்கு இப்போது நல்ல காலம் இல்லே. கருமேகம் மறைக்கிறது. என்ருர் கோபால் ராவ். திரும்பி வரும்போது மலேப் பாதைகளெங்கும் செர்ரி மரங்கள் மெளனமாகச் சிரித்துக் கொண்டிருந்தன. நீர் நிலைகள் ஒரு மோன நிலேயில் சலனமின்றிக் காணப்பட்டன. டோக்கியோ நகரின் பரபரப்புக்கும் இங்கே நிலவும் அமைதிக்கும் எவ்வளவு வித்தியாசம்!” என்று வியந்தார் அம்மாஞ்சி. • ப்யூஜி மெளண்டனைப் பார்த்தீரா? எவ்வளவு அழகு! என்ருர் கோபால் ராவ், சாம்பசிவ சாஸ்திரி கீழே குனிந்து பார்த்தார்.

  • மலேயைப் பார்க்கச் சொன்னுல் கீழே குனிந்து பார்க்

கிறீரே??? என்று கேட்டார் அம்மாஞ்சி. ஏரித் தண்ணிரில் அந்த மலேயின் பிரதிபிம்பம் எவ் வளவு அழகாகத் தெரிகிறது பாருங்கள், ஜப்பான் விசிறி யைப் பிரித்து வைத்த மாதிரி! ?’ என்ருர் சாம்பசிவம், 'ஜப்பானுக்கு வருகிறவர்களில் பெரும்பாலோர் டோக்கியோ நகரைப் பார்த்துவிட்டுப் போய் விடுகிருர்கள். ஜப்பானே அவ்வளவுதான் என்று எண்ணிக் கொள்கி ருர்கள். இந்த ஹகோனே ஏரியையும் இங்குள்ள தேசியப் பூங்காவையும் வந்து பார்த்தால்தானே தெரியும்? ஜப்பானின் ஆத்மா இங்கேதான் இருக்கிறது!?’ என்ருன் பஞ்சு. 'அடடா பெளர்ணமியன்று, வட்ட நிலா வான வீதி tயில் பவனி வரும்போது, அந்த நிலவின் ஒளி ஏரித்தண்ணி சில் வெள்ளியாகப் பளபளக்கிற போது, இங்கே தெப்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/78&oldid=924734" இலிருந்து மீள்விக்கப்பட்டது