பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


சினிமாவிலே பாட்டு எழுதினவங்களும் பாட்டு பாடின வங்களும் சண்டை க்கு வரப்போருங்க! வேலாயி : ஏன் மச்சான்! பாட்டு நல்லாயில்லே! வேலன் : பாட்டு ஷோக் காயிருக்கு: ஒன் குரல்தான் நல்லாயில்லே-அது தொலையட்டும்! நான் ஒனக்கு ஒரு ரகசி வேலாயி: நான் ஒரு ரகசியத்தைச் சொல்லட்டுமா? (அப்போது சொல்லட்டுமா - சொல்லட்டுமா? ரகசியத்தைச் சொல்லட்டுமா?-என்ற சினி மாப் பாடல் காற்றில் மிதந்து வருகிறது.1 வேலன் : வேலாயி! காளி ஆத்தா ஒரு பெரிய தப்பு செஞ்சிட்டது. ஒன்னை அந்தக் காலத்து கம்பர் ஆட்டிலே புடிச்சுப் போட்டிருந்தாலாவது, கட்டுத்தறிக்குப் பதிலா நீயாவது பாடிக்கிட்டிருக்கலாம்! வேலாயி : மச்சான் மச்சான்! ஒங்களுக்கு எவ்வளவு கெட்ட எண்ணம்? நான் கம்பர் வீட்டிலே பிறந்திருந்தா அம்பிகாபதிக்கு சிரச்சேதம் கிடைச்ச மாதிரி எனக்கும் கிடைச்சிருக்குமே! வேலன் : அடடா! நம்ப ஊரிலே பயாஸ்கோப் கொட்டகை வந்ததினலே உண்டான அனர்த்தம் இது! ஆமா ஒனக்கு சேதி தெரியுமா? இரு, இரு சிட்டுக்குருவி சிட்டுக் குருவி: சேதி தெரியுமான்னு பாடிப்பிடாதே! வேலாயி ; ஹி-ஹறி- சொல்லு மச்சான்! - வேலன் : என்னுேட சேக்காளிக்கு கண்ணுலம் நடக்கப் போவுதாக்கும்!