பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


அல்லி: நம்ப தெய்வானை அக்காகிட்டேதானே? கந்த உள்!...தெய்வானை அக்கா இல்லே!.....தெய் வான அண்ணின்னு இனிமே சொல்லோனும்! அல்லி! நீங்க சொல்ற்தும் சரிதான். மாணிக்கம் எனக்கு அண்ணுச்சிதானே? ; : கந்த: ஸ்.மாணிக்கமும் ஆச்சு!...வைடூரியமும் ஆச்சி..அப்பறம் ஒனக்கு எல்லாத்தையும் வெவரமாச் சொல்றேன். நீ போய் நான் சொன்னபடி செய். நான் அந்த முணங்கிலே நின்னுகிட்டிருப்பேன். சுருக்கண ஒடியா! அல்லி: இதோ ஒரு மினிட்டுலே வாறேன்! காட்சி 17 மாசிமலைத்தேவர் வீடு அழகே உருவாகக் கோயிலுக்குப் புறப்படும் தெய்வான கண்ணுடியை எடுத்துத் தில கம் இட்டுக் கொள்கிருள். அது சமயம் அல்லி ஒடி வருகிருள்.1 - அல்லி : அண்ணியோவ்! தெய்வானை (எட்டிப் பார்த்து) யாரு அல்லியா? என்னம்மா ஒறவு முறை புதுசா இருக்கு? அல்லி ; இத்தினி நாளும் புரியாம இருந்திச்சி: இப்ப எங்க கந்தசாமி அண்ணுச்சி சொல்லிக் கொடுத்தாக இனிமே நீ எனக்கு அண்ணியேதான்! . தெய்: ஒகோ! உங்க அண்ணுச்சியா? அவுக சுகமா இருக்காங்களா? கப்பலிலேருந்து வந்தவங்க ஒனக்கு கப்பல் சாமான் வாங்கியாந்திருப்பாங்கம்.(பெருமூச்சு)